Cinema News Stories Trending

ஹாலிவுட் சுள்ளான் – தனுஷ் !!

கோலிவுட்டில் தொடங்கி, பாலிவுட்டில் தடம் பதித்து, ஹாலிவுட் உலகையும் விட்டு வைக்காமல் அங்கும் தன் அடையாளத்தை அச்சடித்த அதிசய கலைஞர் தனுஷ். இவர் தற்போது ” The Gray Man ” எனும் ஆங்கில திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற பிரம்மாண்ட update வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் Captain America Winter Soldier, Civil War, Avengers Infinity War, Avengers End Game ஆகிய படங்களை இயக்கிய ஆன்டனி மற்றும் ஜோ ரூஸோ இயக்கவிருக்கும் புதிய OTT திரைப்படமான ” The Gray Man ” திரைப்படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு முன் தனுஷ் ” The Extraordinary Journey of the Fakir ” எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து தனது இரண்டாவது ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ரயான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், சார்லிஸ் தெரோன் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளனர். Avengers போன்ற படைப்புகளை கொடுத்த வெற்றிப்படைப்பாளிகளின் இயக்கத்தில் உருவாவதால் இப்படத்தின் மீது உலக அளவில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ் போன்ற திறமையான நடிகர்கள் தமிழுக்கும், தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இது போன்ற ஹாலிவுட் படங்களில் நடிப்பதை ஒவ்வொரு தமிழனும் நினைத்து பெருமை பட வேண்டிய விஷயம் என்றே கூறலாம்.

இதை குறித்து ட்விட்டரில் ட்வீட் வெளியிட்ட தனுஷ், ” இது போன்ற ஆக்ஷன் படத்தில் நடிக்க நான் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன், உலகெங்கும் என்னை ஆதரிக்கும் என் அன்பான ரசிகர்களுக்கு நன்றி ” என எழுதி கடிதம் ஒன்றை இப்பதிவில் வெளியிட்டுள்ளார். அது மட்டுமின்றி அக்கடிதத்தின் முடிவில் “Love, D” என குறிப்பிட்டு தன் அன்பை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தி பகிர்ந்துள்ளார். தனுஷின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

தனுஷுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வாழ்த்துப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். தனுஷின் இந்த ஹாலிவுட் பயணம் ஒரு வெற்றி பயணமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.