Specials Stories Trending

மெர்சலின் மெர்சலான எமோஜி கொண்டாட்டம் !!!

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்திற்கென பிரத்தியேகமாக ட்விட்டரில் வெளியிடப்பட்ட எமோஜி வெளியாகி இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைகிறது. இதை ரசிகர்கள் இணையத்தில் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக மெர்சல் திரைப்படத்திற்காக தான் ட்விட்டரிலிருந்து எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த எமோஜிகள் மொத்தம் 14 டேக்களில் இடம் பெற்றிருக்கும். எந்தெந்த 14 டேக்களை  ட்விட்டரில் டைப் செய்தால் மெர்சல் எமோஜி தோன்றும் என்பதை கீழே காணுங்கள்.

ஆளப்போறான் தமிழன் பாடலில் தோன்றும் கருப்பு பனியன் அணிந்த விஜய்யின் புகைப்படம் தான் ட்விட்டரின் இந்த ஏமோஜியில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த எமோஜியானது தொடர்ந்து 72 நாட்கள் ட்விட்டரில் செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தளபதி ரசிகர்களுக்கு இந்த மெர்சல் எமோஜி ஒரு புதுமையான அனுபவத்துடன் உற்சாகத்தை கொடுத்தது.

இந்தியாவிலேயே ட்விட்டர் எமோஜி பெறும் நான்காவது திரைப்படம் மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி தென்னிந்தியாவில் ட்விட்டர் எமோஜி பெரும் முதல் திரைப்படம் மெர்சல் என்பதும் பெருமைக்குரிய விஷயமே.

இந்த எமோஜி வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தது மட்டுமின்றி இப்படத்தின் நீதானே பாடல் வெளியாகியும் இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையும் தளபதியின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

About the author

shafin

உங்களில் ஒருவன்

Suryan FM Twitter Feed

Suryan Podcast