Single-ஆக இருப்பவர்கள் கேட்டு ரசிக்கக் கூடிய யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்களின் ஒரு சிறிய தொகுப்பு இதோ.
பாடல்களின் தொகுப்பு
-
- நமது List-ல் முதல் பாடல், சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நா. முத்துக்குமாரின் வரிகளில் அமைந்த ‘எம்.ஜி.ஆரும் இல்லீங்க நம்பியாரும் இல்லீங்க‘ பாடல். இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் Single பசங்களுக்கென செதுக்கிய வரிகளாய் அமைந்திருக்கும்.
- “ராத்திரியெல்லாம் தூங்கமாட்டோம் Round அடிப்போம், சாத்துற நேரம் நாயர் கடை டீ குடிப்போம்” போன்ற வரிகள் Single பசங்களை கவரும் வகையில் அமைந்திருக்கும்.
-
- அடுத்ததாக Single-ஆக இருந்து Mingle-ஆக தவிப்பவர்கள் கேட்டு ரசிக்க வேண்டிய பாடல், 7G ரெயின்போ காலனி படத்தில் உள்ள ‘நாம் வயதுக்கு வந்தோம்’ பாடல். இப்பாடலில் வரும் அணைத்து வரிகளும் Single-ஆக இருக்கும் இளைஞர்களின் ஏக்கத்தை கூறும் வகையில் இருக்கும். யுவனின் இசையும் அந்த வரிகளுக்கு உயிர் கொடுக்கும்படி அமைந்திருக்கும்.
- “பிப்ரவரி 14 வந்தால் தனிமை அது உருத்தியதே, போனில் தினம் குட் நைட் சொல்ல Girl Friend இல்லை கசக்கிறதே”, எனும் வரிகள் Single-களின் ஏக்கத்தை விளக்கும்.
-
- Single-ஆக இருப்பவர்கள் கேட்டு பெருமைப்பட வேண்டிய ஒரு பாடல் தான் வல்லவன் படத்தில் அமைந்த ‘போடு ஆட்டம் போடு’ பாடல். இப்பாடலில் யுவனின் இசை எல்லோரையும் குத்தாட்டம் போட வைத்தது.
- “ஊரே துணையிருக்கு, எனக்கிங்கு வேறு உறவெதுக்கு”, போன்ற வரிகள் காதல் இல்லாமல் இருக்கும் தனிமைக்கும் கூட தன்னம்பிக்கை கொடுக்கும்.
-
- காதலிக்காமல் இருக்கும் இளைஞர்களின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அழகாக சொல்லும் பாடல் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் உள்ள ‘பாஸு பாஸு’ பாடல்.
- “தள்ளுவண்டி கடையில கடன் சொல்லி LUNCH டா, எங்களோட ஆபீஸ் எல்லாம் டீ கடையில் BENCH டா” போன்ற கலகலப்பான வரிகள் இப்பாடலில் இடம்பெற்றிருக்கும்.
-
- காதலிக்காமல் இருப்பது தான் நமக்கு பாதுகாப்பு என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த பாடல் தான் சென்னை-28 படத்தில் அமைந்த ‘ஜல்சா பண்ணுங்கடா’ பாடல். இப்பாடல் பலருக்கும் நட்பின் இலக்கணமாகவும் திகழ்கிறது.
- “டாவுல விழுந்தாக்க மனசு நோவுல விழுகுமடா, தீவுல இருப்பது போல் திசையே தெரியாம போகுமடா”, எனும் வரிகள் காதலில் விழ நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை வரிகளாக அமைந்திருக்கும்.
-
- ஒருதலைக் காதலர்களின் வழியை உணர்த்தும் வகையில் அமைந்த பாடல் தான் மௌனம் பேசியதே படத்தில் அமைந்த ‘சின்ன சின்னதாய் பெண்ணே’ பாடல். இதில் யுவனின் இசை அணைத்து ஒருதலைக் காதலர்களையும் உருக வைக்கும் வகையில் இருக்கும்.
- “காதல் செய்தால் பாவம், பெண்மை எல்லாம் மாயம், உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே”, என்ற வரிகள் இப்பாடலில் இடம்பெற்றிருக்கும்.
-
- இந்த காலத்தில் உண்மையான காதல் குறைந்துவிட்டது, அதனால் காதலே வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த பாடல் தான் கழுகு படத்தில் உள்ள ‘ஆம்பளைக்கு பொம்பளைக்கும் அவசரம்’ பாடல்.
- “காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி, ஆணும் பெண்ணுமே இதில் காணாம் போச்சு”, போன்ற வரிகளுடன் அமைந்த இப்பாடல் பலரையும் துள்ளிக்குதிக்க வைத்தது.
-
-
- நமது வரிசையில் கடைசியாக இருக்கும் பாடல் புதுப்பேட்டை படத்தில் உள்ள ‘ஒரு நாளில்’ பாடல். இப்பாடல் வாழ்க்கையின் அர்த்தத்தை கூறுவதோடு தனிமைக்கு புது இலக்கணம் வகுக்கும் பாடலாகவும் அமைந்திருக்கும்.
- “இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும், நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்”, போன்ற வரிகள் யுவனின் குரலில் நம் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருக்கும்.
-
நம் வாழ்வின் அங்கமாய் யுவன்
இதைத்தாண்டி உங்கள் மனம் கவர்ந்த யுவன் பாடல்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் அனைத்தும் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிப்போகிவிட்டது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.