Specials Stories

10 measures to check if you are buying things online | ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

10 measures to check if you are buing things online | ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
10 measures to check if you are buing things online | ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

ஆன்லைன்-ல ஸ்மார்ட் போன் ஆர்டர் பண்ண சோப் வருது.. ஸ்பீக்கர் ஆர்டர் பண்ண ஹெட்-போன் வருது.. இப்படி நம்ம ஆர்டர் பண்றது ஒண்ணா இருக்கு.. நமக்கு வர்றது வேற ஒண்ணா இருக்கு! ஆன்லைன் மூலம் பல கோடிகள் மோசடி நடந்துகிட்டு வருது. இந்த மோசடி கும்பல் கிட்ட மாட்டிக்காம ஆன்லைன் ஷாப்பிங் எப்படி பண்ணலாம்-னு உங்களுக்கு புரியுற மாதிரி எளிய 10 Steps ல சொல்லிருக்கோம், வாங்க தெரிஞ்சுக்கலாம்.


  1. எந்த ஆன்லைன் செயலி (application) எடுத்துக்கிட்டாலும் அதுல செக்யூரிட்டி சிக்னல் இருக்கானு verify செஞ்சு பாருங்க.. “HTTPS://” னு URLல இல்லைனா நீங்க ஓபன் பண்ணிவச்சுருக்க செயலி ஒருScam. இந்த மாதிரி செக்யூரிட்டி சிக்னல் இல்லாத செயலி-ல நீங்க எந்த கிளிக் செஞ்சாலும் அது உங்களோட தகவல்களை திருடி உங்களுக்கு எதிரா பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சிக்கும்.
  2. பொதுவாவே நம்ம மக்கள் எல்லாரும் ஆன்லைன் Products எல்லாம் 5 ஸ்டார் ரேட்டிங்-ல இருந்துச்சுன்னா அந்த product ரொம்பவும் தரமானதுனு நினைக்குறாங்க. ஆனால் 5 ஸ்டார் ரேட்டிங்-கும் ஆன்லைன்-ல நாம ஆர்டர் செய்யுற பொருளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. நீங்க எப்பவும் அந்த பொருளோடு ரெவியூஸ் படிச்சு ஆர்டர் பண்ண கத்துக்கணும். பல நபர்களோடு ரெவியூஸ் அந்த பொருளோடு உண்மை தன்மையை பத்தி-ன நமக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.
  3. ஆன்லைன்-ல பல செயலிகள் இருக்கு. எந்த ஒரு பொருள நீங்க வாங்க நினைச்சாலும், நீங்க தேடுற பொருள் எந்தந்த செயலி-ல எவ்வளவு அமௌன்ட்-கு விற்பனை ஆகுதுன்னு ஒப்பீடு செஞ்சு வாங்குங்க. இதனால நம்ம சேவிங்ஸ் மிச்சம் ஆகும்.
  4. நீங்க ஆன்லைன்-ல ஆர்டர் போடுறதுக்கு முன்னாடி அந்த பொருளுக்கு ‘Return & Refund Policy’ இருக்கானு செக் பண்றது ரொம்பவும் அவசியமானது.
  5. இங்கு ஆர்டர் பண்ற பலருக்கு இருக்கிற பிரச்சனை அந்த பொருள எப்படி வாங்கணுறதுதான். COD (Cash On Delivery) , UPI, ATM Card payment-னு நிறைய வழி இருக்கு. உங்களுக்கு வசதியான payment method அ choose செஞ்சு அதுல ஆர்டர் போடுறது உங்களுக்கு நல்லது. ஒருவேளை நீங்க ஆர்டர் பண்ணும்போது பணம் பரிவர்த்தனை சமயத்துல OTP போன்ற இடங்கள உங்களுக்கு சந்தேகம் ஏதாச்சு வந்துச்சுனா நீங்க ஒடனே COD (Cash On Delivery) பரிவர்த்தனைக்கு மாத்திடுங்க.
  6. எப்பாவம் தள்ளுபடி-னு சொல்லி 50% – 80% நிறைய விளம்பரம் செஞ்சு நம்ம கவனத்தை எழுப்பாங்க. நீங்க அந்த நம்பக்கூடாது. நிஜமலே அந்த பொருளோடு விலை எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த பொருள் ஆ வாங்குங்க. தள்ளுபடி-னு போட்டிருக்க எந்த ஒரு பிரத்யேக மெசேஜ் உங்களுக்கு வந்தாலும் அத எந்த காரணத்துக்காகவும் ஒடனே கிளிக் செய்யக்கூடாது. அந்த லிங்க் ஓட URL பாத்து யோசிச்சு தான் கிளிக் பண்ணனும்.
  7. சிலசமயம் ஆன்லைன் ல நீங்க ஆர்டர் பண்ற டிரஸ் நீங்க எதிரிபார்த்த color, size, material -ல இருக்காது. அப்போ Return செய்யலாமா? Warranty இருக்கா?-னு ஆர்டர் பண்றதுக்கு முன்னாடி செக் பண்ணுங்க.
  8. உங்க கவனத்தை எழுத்து உங்கள ஏமாத்த பல Fraud Websites ஆன்லைன்-ல காத்திக்கிட்டு இருக்கு. நீங்க மிக கவனமா எந்த ஒரு லிங்க் அ கிளிக் செய்றதுக்கு முன்னாடி யோசிச்சு கிளிக் செய்யணும். நீக்க செய்யிற ஒரு கிளிக் உங்க மொபைல்-ல இருந்து எல்லா தகவலையும் திருட ஒரு வாய்ப்பா ஆகிரும். உங்க செயலி-ல Customer Care Number, Address எல்லாம் சரியா இருக்கா பாருங்க. Unbelievable Discounts குடுக்குறத நம்பாதீங்க!
  9. நீங்க எந்த ஒரு பெரிய சைட்-ல பொருள் வாங்குனாலும், நீங்க வாங்குற பொருள் எங்கிருந்து வருது, நீங்க யார் கிட்ட இருந்து வாங்குறீங்க-னு தெருஞ்சுகிறது அவசியம். “Sold by” யாருன்னு பாக்கணும்! ஒரு சில ட்ரஸ்ட் வொர்த்தி Sellers தான் நல்ல பொருள்கள் தருவாங்க!
  10. அதிகமா டெலிவரி டைம் எடுத்தா சந்தேக படம். “Free Shipping” அப்படின்னு சொன்னாலும் Hidden Charges இருக்குமா, Extra Fee ஏதாவது எடுத்துக்குவாங்களா பாத்து வாங்கணும்! ஒரு பொருளுக்கு ஒரு விலை சொல்லிட்டு அதுக்கு மறைமுகமா extra அமௌன்ட் வாங்க முயற்சிப்பாங்க.

இந்த 10 டிப்ஸ் ஞாபகம் வைச்சுக்கோங்க! ஆன்லைன் ஷாப்பிங் பண்ணும்போது ஏமாறாம பாதுகாப்பா இருப்பீங்க.

Article By Sakthi Harinath