ஆமாங்க.. இப்போ இருக்கிற இளைஞர்கள் காதல் தோல்விக்கு Use பண்ணிக்கிட்டு இருக்கிற வார்த்தை தான் இது.. உண்மையிலே இந்த ‘Relationship Heart-Breaks’ னா என்ன? எதுக்காக Relationship Heart-Breaks னு சொல்ற எல்லாம் சோகமா, எதையோ பறிகொடுத்தது போல மூலைல உக்காந்துகிட்டு இருக்காங்க? இத பத்தி விரிவா புரியுற மாதிரி தெளிவா பாக்கலாம் வாங்க.. Relationship Heart-Breaks னா காதல் தோல்விய அடையாளமா சொல்ற எல்லாத்துக்கும் ஒரு விஷயம்.. இந்த Relationship Heart-Breaks அதுக்கானது மட்டுமில்ல. ஒருத்தர் மேல நாம வைக்கிற அளவுக்கு அதிகமான பாசம் & எதிர்பார்ப்பு ஒரு நொடியில மாறும் பொழுது அதனால ஏற்படுற பாதிப்பு தான் ‘Relationship Heart-Breaks’. பெற்றோரை இழந்த பிள்ளைகள், திடிர் பிரிவை தாங்காதா நண்பர்கள், ஏமாற்றத்தை சகிச்சுக்கிட்டு வாழ தெரியாதவங்க எல்லாருமே இந்த ‘Relationship Heart-Breaks’ ல மாடிக்குறாங்க..
உடல், மனம், ஆன்மா என ஒரே சமயத்தில மூன்றையும் பாதிக்கக்கூடிய ஒரு வலியான அனுபவம் தான், Relationship Heart-Breaks. இது ஒரு உணர்வுபூர்வமான காயம் (ஆங்கிலத்துல – Emotional Wound), சிலருக்கு இது உடல் வலி போல தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிகமா ஒருத்தர் கூட நேரம் செலவிடும் பொழுது அவங்க மேல நம்மக்கு ஒரு Attention கிடைச்சுரும். அப்போ இருக்கிற அந்த உணர்வு என்னானு தெரியுமா? டோபமைன் (Dopamine), ஆக்சிடோசின் (Oxytocin) போன்ற இரசாயனங்கள் நம்ம mind ல வெளியாகி, உங்களை “மகிழ்ச்சியில்” மூழ்கடிக்கும்.
அவங்க மேல இருக்கிற அக்கறை, பாசம் திடிர்னு உடையும் பொழுது இந்த இரசாயனங்கள் திடீரென நின்றுவிடுது, இது மருந்து வெளியேறிய போது ஏற்படக்கூடிய Withdrawal Symptoms போன்றது. அதனால்தான், உங்களுக்கு “அவர்/அவள் இல்லாமல் வாழ முடியாது” போன்ற உணர்வுகள் வருகிறது. ஆமாங்க இதுவும் ஒருவகை போதை தான், ஒருத்தரோட சந்தோஷம் ஒரு பொருள், நபர் மேல இருக்குதுனா அது அவருக்கு ஒரு தாற்காலிய போதை போன்ற விஷயம் தான். Attachment இருக்கிற சிலர் பிரியும் பொழுது ஏற்படக்கூடிய Abandonment Wound (கைவிடப்பட்ட துயரம்) மனதளவில் காயத்தை தூண்டுகிறது.
இப்படி பல வழில Relationship Heart-Breaks மாட்டிகிட்டு இருந்த இந்த 10 விஷயங்கள் செய்யுறனாள Easy ஆ இதுல இருந்து வெளிய வந்திறலாம்…
- முதல நீங்க செய்யக்கூடியது “Delete Contact”அவங்க contact அ முற்றிலுமா avoid செஞ்சு அதிலிருந்து விலகி வரணும்.. ஏதோ ஒரு வகைல அவங்க உங்க ஞாபகத்துல வந்துகிட்டே இருப்பாங்க.. நீங்க அவங்கள விட்டு எவ்ளோ விலகி இருக்கீங்களா அவலோ உங்களுக்கு நல்லது. அவங்க இல்லை-ன்ற நிஜத்த உங்க Mind ஏத்துக்கும்
- ரெண்டாவது Accept the Pain – இந்த பிரிவ மனசாலை ஏத்துக்கனும். கூடவே இதுக்கான காரணத்தை நீங்க புரிஞ்சிக்கணும். தப்பு யார் மேல இருந்தாலு அந்த situation அ accept செஞ்சு Move On ஆகுற வழிய பாக்கணும். இத செய்யுறனாள உங்ககிட்ட இருக்கிற Guilt குறையும், மேற்கொண்டு இதுக்கு கவலை பட தேவையில்லைனு உங்க மனசு ஏத்துக்க ஆரம்பிக்கும்.
- மூணாவது Express Emotions – மத்தவங்க கிட்ட பேசி/சொல்லி உங்க பாரத்தை குறைக்க Try பண்ணாதீங்க. அப்றம் உங்க புலபல் ஆ சகித்து கொள்ளாம அவங்க ஏதாச்சு சொல்லி உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துவாங்க. மாறுதலா உங்க emotion ஆ இரு கவிதையாவோ, உங்க ஆதாரங்களை ஒரு paper எழுதி அதா கிளிச்சு உங்க emotion ஆ காட்டுங்க..
- நாலாவது Focus on Self-Care – இப்போ உடல் வலிமைய விட மன வலிமைக்கு முக்கியத்துவம் குடுங்க.. உங்க மனச பலம் படுத்த நீங்க முயற்சித்தா அது உங்க உடல் அளவிலையும் உங்கள வலிமை மிக்கவரா மாத்திடும்.
- ஐந்தாவது Avoid Blame, குறைசொல்வதை நிறுத்திவிட்டு அதில இருந்து வெளிய வாங்க. சில சமயத்தில இந்த முடிவு நல்லது னு ஏத்துக்கிட்டு உங்கள நீங்க பக்குவப்படுத்திக்காங்க.
- ஆறாவதா Rediscover Hobbies – உங்களுக்கு பிடிச்ச பொழுதுபோக்கு விஷயங்களை திரும்ப செய்ய ஆரம்பிங்க. இதனால உங்க எண்ணங்கள் மாறும், மீண்டும் உங்கள Active ஆ வச்சுக்க try பண்ணுங்க. Music, Drawing, Swimming, Sports னு உங்களுக்கு இருக்கிற intrest ஆ expose செய்யுங்க.
- அடுத்து Spend Time with Loved Ones – உங்க சுற்றி இருக்கிறவங்க கிட்ட Time spend பண்ணுங்க.. குடும்பம், நண்பர்கள் என பிடிச்சவங்க கூட நேரம் கழியுங்க. அவங்களோட ஆதரவு உங்கள பலப்படுத்தும்.
- எட்டாவது Set New Goals – உங்க வாழ்க்கைல புதிய இலக்கை தீர்மானிங்க. நீங்க செய்யுற வேலை, உங்க படிப்பு சமந்தமாக, இல்லை travelling னு ஒரு Goal வச்சு பயணிக்க ஆரம்பிங்க.
- ஒன்பதாவது – Forgive & Let Go – நீங்க உங்கள மாத்திக்க என்னதான் முயற்சி செஞ்சாலும், நீங்க உங்கள பாதிச்ச விஷயத்தை மறக்கலைனா உங்கனால உங்க life ல ஒன்னு செய்ய முடியாது. இந்த விஷயத்தை மறக்கனும்-னா முதல அதுக்கு காரணமா இருக்கிறவங்கள மன்னிச்சிடுங்க. இது நீங்க நிம்மதியா வாழ ஒரு வழி.
- கடைசியா Building Confidence – நல்லா dress பண்றது, hairstyle correct ஆ வச்சுக்கிறது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை குடுக்கும். உங்க பழைய வாழ்க்கை ஆ மறக்க புதுசா உங்க life அ வடிவமைக்க ஆரம்பிங்க..
இந்த 10 விஷயங்கள செய்யுறனாள உங்க எண்ணமும் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும், அதுமட்டுமில்ல neuroscience, behavioral psychology, and radical action இது மூணும் சேர்ந்து உங்கள பழைய மாதிரி உத்வேகமா மாத்த முயற்சிக்கும். Relationship Heart-Breaks ல ஏற்படக்கூடிய Heart-Breaks உங்கள உடைக்க வரக்கூடியது இல்ல, உங்கள இந்த உலகத்துக்கு ஏத்தமாதிரி வடிவமைக்க ஒரு வாய்ப்பு. மனதளவில உங்கள இந்த சமூகத்திற்கு ஏத்தபடி பரிணாமம் ஆக ஒரு மாற்றம் தான், இந்த அனுபவம்.
Article By Sakthi Harinath

