Cinema News Stories

புதிய பயணம் – நெடுஞ்சாலையில்

இயக்குனர் கிருஷ்ணா நெடுஞ்சாலையில் தன் பயணத்தை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் கிருஷ்ணா அவர்களின் சினிமா பயணத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் உருவான திரைப்படம் நெடுஞ்சாலை. 2006-ல் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக பயணத்தை தொடங்கினார். பெரிதும் ஹிட் ஆக அமைந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட 7 வருடம் இடைவேளை எடுத்துக்கொண்டார் இயக்குனர் கிருஷ்ணா.

ரொமாண்டிக் திரைப்படத்தில் ஹிட் ஆனதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அடுத்த படத்தின் மீது அப்படியே இருந்தது. ஆனால் சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் நெடுஞ்சாலை என்ற திரில்லர் திரைப்படத்தின் மூலம் Comeback கொடுத்தார். த்ரில்லர்லயும் இது வித்யாசமான திரில்லராகா தான் அமைந்தது.

நெடுஞ்சாலையில் நடக்கும் திருட்டை சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது. படத்தின் நாயகன் ஆரி அர்ஜுனன் கதாபாத்திரம் பெயரே வித்தியாசமா தான் இருக்கும் – தார்பாய் முருகன், இவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து நெடுஞ்சாலையில் பயணிக்கும் லாரிகளில் கொள்ளையடிப்பார்.

என்னதான் கொள்ளையராக இருந்தாலும் , திரில்லர் படமாக இருந்தாலும் காதல் இல்லனா எப்படி? அதே நெடுஞ்சாலையில் தாபா ஒன்றை நடத்தி வருபவர் தான் இந்த படத்தின் நாயகி மங்கா. மோதல் தான் காதலின் ஆரம்பம்னு சொல்ற மாதிரி சிறு சிறு மோதலுடன் தான் இங்கேயும் காதல் கதை தொடங்குகிறது.

படம்னா காதல் இருக்கனும், காதல் நல்லா ஒர்கவுட் ஆனா அதுக்கு ஒரு வில்லன் இருக்கனும்ல அதுக்கு தகுந்த மாதிரி இவங்க காதலுக்கு வில்லன் ஒரு போலீஸ். இதுக்கு மத்தியில் ஹீரோ எப்படி நல்லவரா மாறுறாரு , காதல்ல வந்த பிரச்சனை என்ன மேலும் படத்துல நடந்த ஒரு கொள்ளை சம்பவம்னு எல்லாமே ரொம்போ த்ரில்லிங் தான்.

ஆரி அர்ஜுனனின் இயல்பான நடிப்பு பெரிதும் பேசப்பட்டாலும் இந்த கதையில் வேறு பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் கூட நல்ல ஹிட்டாக இருந்திருக்கும் என்று ஒரு கருத்தும் இருந்தது. ஏனெனில் படத்தின் நாயகி ஷிவதாவிற்கு இதுதான் முதல் திரைப்படம். தம்பி ராமையா அவர்களின் கதாபாத்திரம் பேசப்பட்டது. ஒரு பக்கம் நகைச்சுவை, மறுபக்கம் குணச்சித்திரம் என இரண்டையும் Balance பண்ணிருக்காங்க.

நெடுஞ்சாலையில் 100 கிமீ மின்னல் வேகத்துல டிராவல் பண்ற மாதிரி ஹீரோ தார்ப்பாய் முருகனோட பிளாஷ்பேக் கூட அதே ஸ்பீட்ல வேகமா டிராவல் பண்ண வைக்கிறாங்க. சுவாரசியமும் குறையாம பண்ணதுக்கான கிரெடிட் இயக்குனர் கிருஷ்ணா அவர்களை தான் சேரும். என்னதான் திரில்லர் படமா இருந்தாலும் பாடல்கள் அற்புதமா இருக்கு.

சத்யா அவங்க இசையில். நெடுஞ்சாலையில் நடக்கும் நள்ளிரவு கொள்ளை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும் படம் பார்ப்பவர்களுக்கு த்ரில்லிங், லவ், காமெடினு எல்லாமே கிடைக்கிற மாதிரி கதையை அமைச்சிருக்காங்க. படம் பார்த்துட்டு வந்த பிறகு இந்த படம் நெஜமாவே சில்லுனு ஒரு காதல் படம் இயக்குனர் தான் எடுத்தாங்களானு ஒரு சந்தேகம் கண்டிப்பா எல்லார் மனசுலயும் வந்துச்சு.

காரணம் அவர் தேர்ந்தெடுத்த கதைக்களம். நீண்ட இடைவெளிக்கு அப்பறம் இந்த திரைப்படம் வந்திருந்தாலும் இன்னும் கூட இயக்குனர் வெயிட் பண்ணி தெரிந்த முகங்கள வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கலாம்னு நிறைய பேர் சொன்னாங்க. எப்டி இருந்தாலும் நெடுஞ்சாலை ஒரு ஒரு புதிய பயணமாகதான் இயக்குனர் கிருஷ்ணா அவர்களுக்கு அமைஞ்சிருக்கு.

Article by RJ Nandhini

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.