முழு வில்லனாக, வில்லன் ஆனாலும் ஹீரோவாக தல அஜித். தல ரசிகர்களுக்காகவே தல ரசிகர்களால் உருவாக்கப்பட்டு தல ரசிகர்கள் நடித்த படம் மங்காத்தா. மேலும் தனது 50 வது படத்தில் எந்த நடிகரும் வில்லனாக நடிக்க யோசிக்கும் நேரத்தில் தல அஜித் வித்தியாசமான இந்த மங்காத்தா ஆட்டத்தை ஆட முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
பல சஸ்பென்ஸ்களோட ஜாலியான வில்லனாக 500 கோடியை கொள்ளையடிக்க திட்டமிடும் 4 கெட்டவர்கர்களுடன் 5வது ஆளாக நம்ம தல அஜித். சஸ்பென்டில் இருக்கும் இன்ஸ்பெக்டராக, பணத்தை கொள்ளையடிக்க பிரேம்ஜி, மஹத், வைபவ், அஸ்வினுடன் இணைந்தாலும் நடுவில் அவர்களை கொள்ளை போடும் திட்டத்தில் போலீஸான வில்லனாக, திரிஷா வுடன் காதலனாக, பண வெறியில் காதலியின் அப்பாவை காரில் இருந்து தள்ளி விடும் நேரத்திலும், பணத்திற்காகவே காதலித்ததாக த்ரிஷாவிடம் துரோகத்தை வெளிப்படுத்தும் நேரத்திலும் “ஒன் மேன் ஷோ”வாக மங்காத்தா ஆட்டத்தை அசரவைத்து
இருப்பார் அஜித்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் “விளையாடு மங்காத்தா”, “மச்சி ஓபன் தி பாட்டில்” சூடு பிடித்தது, “கண்ணாடி நீ கண்ஜாடை நான்” காதலின் ஒரு சுகம், “வாடா பின்லேடா” காதலில் ஒரு ஆட்டம், “என் நண்பனே” ஒரு பெண்ணின் காதல் தோல்வியை உணர வைத்தது. படத்தின் ஓட்டத்தில் சட்டென்று ஒரு திருப்பமாக கிளைமாக்ஸ். நல்லவனாகவே இறுதி வரை வரும் அர்ஜுன், அஜித் ஆடும் மங்காத்தாவில் பார்ட்னர்-என தெரியவரும் பொழுது ஏற்படும் ட்விஸ்ட் எதிர்பாராத சஸ்பென்சில் கொண்டு நிறுத்தியது.
எப்பொழுதும் ஹீரோவாகவே நடித்து போர் அடித்து விட்டது போல், “நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது” என்று அஜித்தே
சொல்லும் வசனம் சற்று சுவாரஸ்யத்தையும் பிரேம்ஜி உடனான
காட்சிகள் வேடிக்கையாகவும் அமைந்தன.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் ட்ரெண்ட் செட் செய்து இருந்தார்.
மேலும் படத்தின் இறுதியில் படத்தின் making வீடியோவை இணைத்து மேலும் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தனர், அதில் அஜித்தின்
off screen லூட்டிகள் தல ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.
சீட்டு கட்டு ஆட்டத்தில் கீழே இறக்கும் சீட்டை போல் தேர்ந்தெடுக்கப்பட்ட
சிறப்பான நடிகர்களின் நடிப்பில் மங்காத்தா ஆட்டத்தில் வெற்றி
பெற்றார் இயக்குனர் வெங்கட் பிரபு.மீண்டும் இவர்களின் கூட்டணியில் ஒரு மங்காத்தா ஆட்டத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்!!