2019-ஆம் ஆண்டு பல படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. அதில் மக்கள் மனதில் இடம்பிடித்த 10 கதாநாயகர்கள் யார்யாரென்று இந்த உரையில் காணலாம்.
தளபதி விஜய்
தளபதி படம் ரிலீஸ் என்றாலே தளபதி ரசிகர்களுக்கு திருவிழா தான். 2019 தீபாவளி ரிலீஸாக தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியானது. வழக்கம் போல் இப்படத்திலும் தளபதி விஜய் தனது Style-ஆன நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வர்த்தகரீதியாக தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்தும் நடிகர்களுள் விஜய்க்கு பெரும்பங்கு உள்ளது.
விஜயின் சமீப படங்கள் அனைத்துமே சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் பிகில் திரைப்படமும் மக்களை ஆரவாரமாக கொண்டாட வைத்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
இந்த வருடத்தின் தொடக்கமே தலைவரின் அதிரடி தொடக்கமாக அனைவருக்கும் அமைந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இந்த ஆண்டு பேட்ட படம் மூலம் சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.
ரஜினிக்கெனவே இருக்கும் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தலைவரின் ஒட்டுமொத்த மாஸ் படமாக அமைந்த பேட்ட படம் மரண மாஸாக ஹிட் ஆனது.
இந்த ஆண்டின் சிறந்த படங்களின் வரிசையில் பேட்ட படம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.

தல அஜித்
தல அஜித்துக்கு இந்த ஆண்டு டபுள் டக்கர் ஆண்டாக அமைந்தது. விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை என்ற இரு படங்களும் இந்த ஆண்டின் தல Treat ஆக அமைந்தது.
விஸ்வாசம் படம் மூலம் அணைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்த அஜித் நேர் கொண்ட பார்வை மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்தை மக்கள் மனதில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஆழமாக பதியவைத்துள்ளார்.

சூர்யா
நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் பாசத்துடன் அழைக்கப்படும் சூர்யா இந்த வருடம் இரண்டு படங்களை தன ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் NGK படமும், பொறுப்பான அதிகாரியாய் காப்பான் படத்திலும் வலம் வந்துள்ளார்.
இந்த ஆண்டில் நல்ல படங்கள் கொடுத்த நல்ல நடிகர்கள் பட்டியலில் சூர்யாவும் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

தனுஷ்
தன் தத்ரூபமான நடிப்பினால் முயற்சியின் எடுத்துக்காட்டை வளர்ந்து நிற்கும் நடிகர் தான் தனுஷ். அசுரன், என்னை நோக்கி பாயும் தோட்டா என இரு மாறுபட்ட பரிணாமங்களில் இவ்வருடம் தனுஷ் திரையில் தோன்றியுள்ளார்.
அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. இந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்
இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.
இப்படம் சிவகார்த்திகேயனின் Comeback என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகியுள்ள ஹீரோ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஹீரோ Genre-ல் வெளியாகியுள்ள இப்படம் கல்வி சம்மந்தமான பிரச்சனைகளையும் விரிவாக மக்களுக்கு எடுத்து உணர்த்தியுள்ளது.

சியான் விக்ரம்
விக்ரமின் மாறுபட்ட தோற்றத்தில் வெளிவந்த கடாரம் கொண்டான் திரைப்படம் சியான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.
ஒரு நடிகனாக தனது நடிப்பை அடுத்தடுத்த படங்களில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போவதில் விக்ரம் வல்லவர்.
இந்த ஆண்டு விக்ரமுக்கு ஒரு படம் மட்டுமே ரிலீஸான போதிலும் அப்படம் மூலம் அவர் தன ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி
ஏற்கனவே தனக்கென தனி ரசிகர்களை சேர்த்துள்ள ஜெயம் ரவி இந்த ஆண்டு வெளியான கோமாளி படம் மூலம் 90-s kids-களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறிவிட்டார். ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக இப்படம் அமைந்துள்ளது.
இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயம் ரவிக்கு அவரது ரசிகர்கள் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டின் மக்கள் கொண்டாடிய Commercial படமாக கோமாளி அமைந்தது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி
ஒரே வருடத்தில் எத்தனை படம் நடித்தாலும் அனைத்திலும் தன தனித்துவமான தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்துவதில் விஜய்சேதுபதிக்கு அவரே நிகர் என்று கூறலாம்.
இவ்வகையில் 2019-ம் வருடம் விஜய்சேதுபதி 5 படங்களில் நடித்துள்ளார்.பேட்ட, சூப்பர் deluxe, சங்கத்தமிழன், சாயிரா, சிந்துபாத் ஆகிய படங்களில் இவ்வருடம் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

அருண் விஜய்
அருண் விஜய் தனது திரையுலக வாழ்க்கையில் இரண்டாம் பாதியை சிறப்பாக அமைத்து வந்து கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். இந்த வருடம் அருண் விஜய் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த தடம் திரைப்படம் சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டு கொண்டாடப்பட்டது. சாஹோ திரைப்படத்திலும் தன தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
