Cinema News Stories

2025 முதல் பாதியில் 100 கோடி வசூல் படைத்த தமிழ் படங்கள்

100 cr movies - cover image
100 cr movies - cover image

2025 முதல் பாதியில் 100 கோடி வசூல் படைத்த தமிழ் படங்கள் – முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 100 கோடிகள் வசூல் சாதனை படைத்துள்ள படங்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன. இதில் அஜித் குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, தனுஷின் குபேரா என தமிழ் திரையுலக வெற்றி படங்களின் லிஸ்ட் உள்ளது. இதோ.


விடாமுயற்சி

விடாமுயற்சி – அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன் என தமிழ் திரையுலக முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படம் விமர்சன ரீதியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படம் குறித்து பல விமர்சகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களின் கருத்துகளை பகிர இப்படத்திற்கு இது வசூல் ரீதியில் மிக பெரிய சரிவை தந்தது. இருப்பினும் விடாமுயற்சி திரைப்படம் 100 கோடிகள் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

2025 First half Report: 100 Cr Movies in Tamil Cinema

டிராகன்

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம், டிராகன். இப்படம் 2025 பிப் இறுதியில் தமிழ் சினிமாவில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்ட திரைப்படம். இப்படம் 100 கோடிகள் கடந்து பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

2025 First half Report: 100 Cr Movies in Tamil Cinema
2025 First half Report: 100 Cr Movies in Tamil Cinema

குட் பேட் அக்லி

குட் பேட் அக்லி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இரண்டாவது படம். இப்படத்தில் திரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ் என தமிழ் திரைப்பட கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகியுள்ள அதிரடி திரைப்படம். இப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக பெரும் லாபம் அடைந்த படமாகும்.

2025 First half Report: 100 Cr Movies in Tamil Cinema
2025 First half Report: 100 Cr Movies in Tamil Cinema

குபேரா

குபேரா – தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ரஷ்மிகா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் தமிழ் – தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகி வெளியானது, இப்படம் குறித்து சில கலவையான விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும் இப்படம் 100 கோடி வசூல் கடந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் தனுஷ் திரைப்பயணத்தில் தொடர்ந்து 100 கோடி வசூல் கடந்துள்ள நான்காவது படமாகும்.

2025 First half Report: 100 Cr Movies in Tamil Cinema
2025 First half Report: 100 Cr Movies in Tamil Cinema