இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ திரைப்படம் இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இப்படம் தொடர்புடைய சுவாரஸ்ய தகவல்கள் சில இந்த தொகுப்பில் உள்ளது.
சின்ன வயசுல ஒரு சூப்பர் ஹீரோ டிரஸ் வேணும்னு வீட்டுல கண்டிப்பா அடம் பிடிச்சி இருப்போம்… இந்த படத்த பத்தி எப்போ பேச ஆரம்பிச்சாலும் எனக்கு நா முதன் முதல கேட்ட சூப்பர் ஹீரோ டிரஸ் தான் ஞாபகம் வரும்…ஆமா இந்த படத்துல சூப்பர் ஸ்டார் போட்ட டிரஸ் தான் நா கேட்ட சூப்பர் ஹீரோ டிரஸ். சூப்பர் ஸ்டார் படம் பத்தி பேச ஆரம்பிச்சாலே ஸ்டைல்,ஆக்ஷன்,மாஸ் னு தான் பேசுவாங்க நா என்னடா ட்ரெஸ்ஸ வச்சி ஆரம்பிக்குறேனு யோசிக்குறீங்களா..வயசு பையனா இருக்குறப்ப உள்ள ஒரு சட்ட வெளிய ஒரு சட்ட,வாயில மவுத் ஆர்கன், கழுத்தில் ருத்ராட்சம், கையில் காப்பு, முன்னதாக நீட்டியிருக்கும் நான்கு முடி.. என மரண மாஸான லுக்கில் இருப்பார்,..சட்டையை ஒதுக்கி அவர் பஞ்ச் டயலாக் பேசுறப்ப சட்டடைய கழட்டி தலைக்கு மேல சுத்துன கூட்டம் தானே நாம.அப்படியே கட் பண்ணி வயசானவரா காட்டுறப்ப பொதுவா இந்த ஜிப்பாலம் போட்ட வயசானவங்க மாதுரி டிரஸ் பண்றனு சொல்லுவாங்க ஆனா அந்த ஜிப்பாவ ஒருத்தர் போட்டு இவ்ளோ ஸ்டைலா இருக்க முடியுமான்னு நம்மள அசர வச்சாரு அவரு…ஆமா படத்து பெயர சொல்லாமலே இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன்ல… என்வழி தனிவழி தனக்குனு ஒரு பாதையை உருவாக்கி அதுல அன்பால தானா சேர்ந்த படைய சேர்த்த படையப்பா தான்.இன்னையோட இந்த படம் வந்து 26 வருஷம் complete ஆகியிருக்கு…

இந்த படத்துல நீலாம்பரி சொன்ன வசனம் வயசானாலும் (உன்னோட ஸ்டைலும்,அழகும் உன்ன விட்டு போகவே இல்ல )தான் படத்தோட ஆரம்பத்துல இருந்து முடியுற வர நம்ம எல்லாருக்குமே தோணும்.இந்த படத்துல ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு நிமிஷமும்,ஒவ்வொரு நொடியும் ரஜினி ரசிகர்களுக்காகவே செதுக்கப்பட்டிருக்கும்.பம்பா கண்டா படையே நடுங்கும்னு சொல்லுவாங்க ஆனா இந்தப் படத்தோட அறிமுகக் காட்சியிலேயே புற்றுக்குள் இருக்கும் பாம்பைக் கையால பிடித்து, அதற்கு முத்தமும் கொடுத்து நீலாம்பரி வசுந்தராவின் மனதைக் கொள்ளையடித்ததோடு ரசிகர்களை ரசிக்க வச்சது மட்டுமில்லாம அனுமோகனோட சந்தேகம் நம்மள சிரிக்கவும் வச்சிருக்கும். மாப்பிள்ளை இவர்தான். இவர் போட்டிருக்க சட்டை என்னது’ என ரஜினி சொல்லும் வசனம், இன்றைய தேதி வரை பிரபலம்.சூப்பர் ஸ்டார சூப்பரான நடிகராவும் இன்னொரு முறை நிரூபிச்ச படம்.உனக்கு பிடிச்ச மாப்பிள்ளையை இரண்டாம் பாதியில் மேல் துண்டை எடுத்து ஊஞ்சலை இழுத்துப் போட்டு உட்காரும் ரஜினியின் ஸ்டைல் வேற லெவல்!
படையப்பாவ சூப்பர் ஸ்டார் படமா எவ்ளோ கொண்டாடுறோமோ அதே அளவுக்கு சூப்பர் ஸ்டார்ஸ் நடிச்ச படமாவும் கொண்டாடி இருக்கோம்.நம்ம வீட்டுல அப்பா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருந்தாலும் அவர் கூட நம்ம இருக்கணும்ங்கிற ஏக்கத்தையும்,அவர் நம்ம மேல வச்சிருக்க பாசத்தையும் வெளிப்படுறத சிவாஜி கண்ணனுக்கு முன்னாடி நிப்பாட்டி இருப்பாரு. அந்த வீட்டை விட்டு வெளிய போறப்ப ரஜினி கைய பிடிச்சு அவர் நடக்குறதுல அந்த பையன் மேல அவர் வச்சி இருக்க நம்பிக்க தெரியும்.அவர் பொண்ணு கையெழுத்து போடுறப்ப அவர் அழுகுறதுல அந்த வருத்தம்,கடைசியா ஒரு தடவ நா பொய் உக்காந்துட்டு வந்துரட்டுமா அப்படினு சிவாஜி கேக்குறப்ப கண்ணுல கண்ணீர் வராத ஒருத்தரும் இங்க இருக்க மாட்டோம்.நடிகர் நிலம் நடிகர் திலகம் தான்.

படையப்ப பத்தி பேசுனா நிலமபெரிய மறக்க முடியாது.ரஜினிக்கு நிகரான அறிமுகக் காட்சியும், சில இடங்களில் மிடுக்கு, ஆணவப் பேச்சு, கம்பீர நடை, திமிரான பார்வை… என்று ரஜினியையே தூக்கிச் சாப்பிடும் கணமான கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு! ரஜினியிடம் ரஜினி ஸ்டைலிலேயே சல்யூட் அடிப்பது, ‘மின்சாரக் கண்ணா ‘ பாடல் எனப் படம் முழுக்க ரஜினிக்கு நிகராக ஒரு கலக்கு கலக்கியிருப்பார், இந்த நீலாம்பரி. பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரும்போது, சூரிய வெளிச்சத்தால் கண்கள் கூச நாசர் அணிந்திருக்கும் கண்ணாடியைக் கழட்டி ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலாகப் போட்டுகொள்ளும் காட்சி அட்டகாசமான கிளாஸிக் ஏரியா.ரஜினிக்கு நிகரான வில்லன் அப்படினு சொல்றப்ப என்னைக்கும் நீலாம்பரிய தவிர்க்க முடியாது.
மொத்தத்துல வயசானாலும்,வருஷமானாலும் இந்த படத்தோட MAAS -ம் மவுசும் எப்போவும் குறையாது.