’நேர் கொண்ட பார்வை’ படத்தோட தலைப்பு போலவே படத்தோட கருவும், சொன்ன கருத்தும் ரொம்ப ஸ்ட்ராங் ஆன ஒன்னு.
பெண்கள் தங்களுக்கான குரலை கொடுக்க வேண்டிய இடத்துல கொடுக்கணும்ன்றதையும், தங்களுடைய விருப்பு, வெறுப்புகளை தெரிவிக்க முழு உரிமை உண்டுன்றதையும், முக்கியமா ஒரு பெண் உங்களுக்கு மனைவியாகவே இருந்தாலும் “NO MEANS NO” ன்ற ஒரு வாக்கியத்த மக்கள் மனசுல ஆழமா பதிய வெச்ச ஒரு படம்.

என்னதான் நவீன சமூகமாய் இருந்தாலும்… இன்றைக்கும் சமூகம்… பெண்களையும், ஆண்களையும் எப்படி வேறுபடுத்தி பார்க்குது, ஆண்கள் ஒரு விஷயத்த செய்யும்போது அத ஏத்துக்கற சமூகம் அதே விஷயத்த பெண்கள் செஞ்சா தப்புனு சொல்லுது, தப்பு யார் செஞ்சாலும் தப்புதான்…
இதுல ஆண்கள், பெண்கள்னு எந்த வேறுபாடும் இல்ல… இப்படிப்பட்ட விஷயத்த ஆணித்தரமா சொல்லியது மட்டுமில்லாம… பெண்களோட உடைய வச்சு அவங்களோட ஒழுக்கத்தை முடிவு செய்ய கூடாது அப்படின்னும் இந்த படம் பதிவு செஞ்சுருக்கு.

இந்த படம் பெண்கள மையமா வெச்சு எடுத்த படமா இருந்தாலும், அதுல கமர்ஷியல் மாஸ் ஹீரோ அஜித் குமார் நடிச்சதால மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைச்சுது. படம் சொல்ல வந்த கருத்த மக்களிடையே கொண்டு போய் சேர்க்க அஜித் குமார் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
இது மாதிரி நிறைய சமூக அக்கறை சார்ந்த திரைப்படங்கள் வெளி வரும் பட்சத்தில் சமூக மாற்றங்களும் நிகழும். இம்மாதிரியான பெண்கள் சார்ந்த திரைப்படங்களில் அஜித் குமார் போன்ற மாஸ் ரசிகர்களைக் கொண்ட நடிகர்கள் நடித்தால் பெண்களின் நிலை இன்னும் உயரும்.

இன்னையோட இந்த படம் திரைக்கு வந்து 4 ஆண்டுகள நிறைவு செஞ்சாலும் மக்களின் மனசுல இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் பசுமரத்தில் ஆணி போல் பதிந்திருக்கிறது.