1. ஜெய்ஹிந்த்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தானே இயக்கி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் தமிழ் திரைப்படம். 1994 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் தமிழ் சினிமாவில் பலர் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தாய் மணிக்கொடி’ போன்ற பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
2. துப்பாக்கி

துப்பாக்கி – தளபதி விஜய் நாயகனாக நடிக்க 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரில்லர் திரைப்படம்.
இப்படத்தில் காஜல் அகர்வால், சத்யன் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது.
3. இந்தியன்

இந்தியன் – இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் கமல் ஹாசன், சுகன்யா, மனிஷா என பலர் நடிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்தியா சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படமாக கொண்டாடப்பட்ட திரைப்படமாகும்.
4. சேதுபதி IPS

சேதுபதி IPS – நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தேசப்பற்று பற்றிய பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கேப்டன் பிரபாகரன், நரசிம்மா என பல திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் இருந்து வரும் நிலையில் ‘சேதுபதி IPS ‘ திரைப்படம் பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாகும்.
இப்படத்தில் விஜயகாந்த் நாயகனாக நடிக்க, மீனா, நம்பியார், ஸ்ரீவித்யா என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை இயக்குனர் பி வாசு இயக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
5. அமரன்

அமரன் – தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு ஹிட் ஆன திரைப்பட வரிசையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம், அமரன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
அமரன் திரைப்படத்தினை நடிகர் கமல் ஹாசன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை படமாக இயக்கி ரசிகர்களின் மனதை வென்றுள்ளனர்.