பொதுவாவே அப்பா ன்ற வார்த்தைக்கு அழகு அதிகம் தாங்க. அதுவும் பெண் பிள்ளைகள் தன்னோட அப்பாவ அப்பான்னு வாய் நிறைய கூப்பிடும்போது கண்டிப்பா எப்பேற்பட்ட கல்நெஞ்சா இருந்தாலும் மெழுகா கறையாதான் செய்யும். அதே மாதிரி அந்த அப்பான்ற வார்த்தை… படம் பார்த்த எல்லாரையும் கரைய வச்சிருந்துச்சு. ஆமா நம்ம நடிகர் அஜித்குமார் நடிச்ச விசுவாசம் திரைப்படத்தை பற்றி தான் சொல்கிறேன்.
சிறுத்தை சிவா அவர்கள் நம்ம அஜித் குமாருக்கு ஒரு சிறந்த திரைப்படம் கொடுத்திருந்தாரு. இந்த படத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்ணதுனால நம்ம இசையமைப்பாளர் டி. இமானுக்கு தேசிய விருதும் கிடைச்சிருந்தது. இந்த படத்துல இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே பாட்டுக்கு வையகமே அடிமை. இந்த படத்துல நெகட்டிவ் கதாபாத்திரத்தில ஜகபதி பாபு நடிச்சிருப்பாரு.

இன்னும் சுருக்கமா சொல்லப்போனா இப்ப இருக்கிற அப்பாக்களும், அப்பறம் அப்பாவாக போற அப்பாக்களும் இந்த படத்தை எத்தனை வாட்டி வேணாலும் பார்ப்பாங்க ஏன்னா சிறுத்தை சிவா அவர்கள் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு போய் சேர்ற மாதிரி அருமையான கதைக்களம் அமைச்சிருந்திருப்பாரு.
அதுவும் திரைப்படத்தினுடைய ஸ்டார்ட்டிங்ல தூக்குத்தொரனா அடாவடி, தூக்குத்தொரனா அலப்பறை இப்படி பெரிய பில்டப்பா இருந்திருந்தாலும் இந்த படத்தினுடைய கதாபாத்திரத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருந்தது. ஒரு பாசமிகு அப்பாவும் பணம் காசு இருக்கிற அப்பாவும் தன் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு செய்ற செயல்கள் தான் திரைப்படமே.

இந்த படத்துல என்னதான் நம்ம அஜித் குமார் வயசான மாதிரி நடிச்சிருந்தாலும், அவரு எல்லாரு மனசுலயும் சாலிடா இருக்கறதுக்கான காரணமும் அந்த எளிமையான தோற்றம் தான். இந்தப் படம் பெரிதும் பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது. அப்பா சென்டிமென்ட் படம் எல்லாருக்குமே பிடிச்சு இருந்துச்சு
அதுக்கு காரணம் நம்ம அஜித் குமார் நயன்தாராவோட நடிப்பு, சிறுத்தை சிவா அவர்களுடைய டைரக்ஷன், நம்ம டி இமான் அவர்களுடைய மியூசிக் இது எல்லாமே ஒன்றாக சேர்ந்த கலவைதான் விசுவாசம் திரைப்படம். இந்த படத்த 2019 ஜனவரி 10ஆம் தேதி உலக அளவில் ரிலீஸ் பண்ணி இருந்தாங்க. இந்த படம் 180 கோடிக்கு மேல கலெக்ஷன் கட்டி இருந்தது. வழக்கமா கோடிக்கணக்குல வசூல் பண்ணுதுன்னா அது நல்லா ஆக்சன் நிறைந்த மாஸான படமா தான் இருக்கும்.

ஆனால் ஒரு அப்பா சென்டிமென்ட் படத்துக்கு இவ்ளோ கோடி கணக்குல கலெக்ஷன் கட்டினது இந்த படத்துக்கு தான். விசுவாசம் திரைப்படம் நம்ம அஜித் குமார் அவருடைய கேரியர்லயே முக்கியமான திரைப்படமாக என்றும் நிலைத்திருக்கும்.