மருத்துவ பட்டம் வென்ற தமிழ் திரையுலக டாக்டர் நடிகைகள் – இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் நடிகையாக பணியாற்றி வரும் நடிகைகளில் டாக்டர் பட்டம் வென்ற முக்கிய நடிகைகளின் லிஸ்ட் மற்றும் சில தகவல்கள் உள்ளது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, வித்யா பிரதீப், ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி என பலர் உள்ளனர். முழு லிஸ்ட் இதோ.
வித்யா பிரதீப்.
வித்யா பிரதீப் – தமிழ் சினிமாவில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் பட்டைய கிளப்பிய நடிகை. இவர் தடம், பொன்மகள் வந்தால் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இவர் சினிமாவிற்கு முன் மருத்துவராக பணியாற்றியவர், மேலும் இவர் கண் ஆராய்ச்சியில் (Ophthalmology) Ph.D பட்டம் பெற்றுள்ளார். கண்களில் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளுக்கு தனது ஆராய்ச்சி மூலம் தீர்வை கண்டறிந்து வெற்றி பெற்றுள்ளார்.

சாய் பல்லவி
சாய் பல்லவி – தமிழ் , தெலுங்கு என இரு மொழியிலும் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர். இறுதியாக இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இவர் அடுத்து ஹிந்தி சினிமாவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா என்ட்ரி-க்கு முன் இவர் ஒரு நடன கலைஞராக பிரபலமானார். ஆனால் இவர் ஒரு மருத்துவர். சாய் பல்லவி தனது MBBS மருத்துவ பட்டத்தை Tbilisi State Medical University, ஜார்ஜியா-வில் பெற்றுள்ளார்.

ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா – தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர். இளம் வயதில் பெரிய அந்தஸ்த்து பெற்ற நடிகையாக வலம் வருகிறார். ஸ்ரீலீலா தற்போது தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் நடிகையாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவர் ஒருபக்கம் பிசியாக நடித்து வந்தாலும் மறுபுறம் தனது MBBS படிப்பை தொடர்கிறார். படப்பிடிப்புடன் சமநிலையாக்கி படிக்கிறார், ஸ்ரீலீலா.

மீனாட்சி சௌத்ரி
மீனாட்சி சௌத்ரி – தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் முக்கிய நடிகை. இவர் தமிழில் லக்கி பாஸ்கர், தி கோட் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். திரைத்துறையில் உச்ச நடிகையாக புகழ் பெற்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இவர், மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்றுள்ள பிரபலம். இவர் ஒரு பல் மருத்துவம் பட்டம் வென்றவர்.

அதிதி சங்கர்
அதிதி சங்கர் – தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பணியாற்றி வரும் இளம் நடிகை. இவர் பிரபல முன்னணி இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் ஆவார். திரைத்துறையில் நடிகை மற்றும் பாடகராக பயணித்து வரும் இவர், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ மற்றும் கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் நாயகியாக நடித்து பலர் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இவர் திரைத்துறை என்ட்ரிக்கு முன் MBBS டாக்டர் பட்டம் வென்றவர்.

ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி – தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, மாமன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர். இவர் திரைத்துறை என்ட்ரிக்கு முன் கேரளாவில் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் MBBS டாக்டர் பட்டம் வென்றுள்ளார்.


