Cinema News Stories

இசைஞானியின் இசை வாரிசு!

Yuvan single
Yuvan Single special

ஒரு ஊர்ல ஒரு வெட்னரி டாக்டர் இருந்தாரு… பொதுவாவே வெட்னரி டாக்டர் வேலை என்னன்னா, நம்ம வளக்குற செல்ல பிராணியை கொண்டு போறோம்னா என்ன பிரச்சனைன்னு பார்த்து அவறே அதுக்கான மருந்து கொடுத்துடுவார். அப்படிப்பட்ட ஒரு வெட்னரி டாக்டர் பற்றி தான் நான் இப்ப சொல்ல போறேன். இந்த வெட்னரி டாக்டரோட ஸ்பெஷல் இவரு 17 வயசுலயே வெட்னரி டாக்டராகிட்டார். அது எப்படின்னு யோசிக்கலாம் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரிஞ்சிடும்.

ஆரம்ப கட்டத்துல இவரோட வேலையை என்னதான் சிறப்பா பண்ணாலும், இவர் இருந்தா அந்த இடம் சரியா இருக்காது அப்டின்ற ஒரு Myth கிரியேட் ஆயிட்டே இருந்துச்சு. ஆனா அதெல்லாம் கடந்து பல வருஷமா பல பேர் கூட போட்டி போட்டுக்கிட்டே இருந்தாரு. ஒரு தொழில்னு எடுத்தா அதுல பல போட்டி இருக்க தானே செய்யும், ஆனா பல வருஷமா பல போட்டியாளர்கள் மாறினாங்க. ஆனா இவர் எத்தன போட்டியாளர்கள் வந்தாலும் எல்லார் கூடயும் போட்டி போட்டுக்கிட்டு இருந்தாரு.

அப்படிப்பட்ட ஒரு வெட்னரி டாக்டர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இவரை ஏன் நான் வெட்னரி டாக்டர் அப்டினு சொல்றேனா, அது நான் சொன்னது இல்ல ஒரு மேடையில இயக்குனர் தியாகராஜ குமார ராஜா சொன்னது. ஒரு இயக்குனருக்கு என்ன தேவைன்னு அவரு சொல்றதுக்கு முன்னாடி, இவரே கண்டுபிடிச்சு அவங்களுக்கு தேவையான இசைய கொடுக்குற ஸ்பெஷல் தான் யுவன் சங்கர் ராஜா கிட்ட இருக்கக்கூடிய சிறப்பம்சம்.

இசைஞானி இளையராஜா அவர்களோட இசை வாரிசான யுவன் சங்கர் ராஜா 17 வயசுலயே 1996-ல ரிலீஸ் ஆன அரவிந்தன் படம் மூலமா மியூசிக் டைரக்டர் ஆகிட்டாரு. சின்னப்பையன் இவருக்கு என்னப்பா இசை தெரியும், அப்படின்னு அந்த பாட்டை கேட்ட யாராலயுமே டக்குனு சொல்லவே முடியாது. ஏன்னா ஒரு கைதேர்ந்த இசையமைப்பாளர் எப்படி இசையமைப்பாங்களோ அப்படி இசை அமைப்பவர் தான் யுவன் சங்கர் ராஜா.

இவருக்கு என்னப்பா இசைஞானி ஓட வாரிசு, ரொம்ப ஈஸியா பீல்டு குள்ள வந்துட்டாருன்னு சொல்லலாம். ஆனா அந்த பீல்ட தக்க வைக்கிறதுக்கான உழைப்பை போடணும். எவ்வளவோ வாரிசுகள் இந்த திரையுலகத்துக்குள்ள, வந்து பெரிய அளவுல ஜொலிக்க முடியாமல் போய் இருக்காங்க. So இங்க நிலைச்சு நிக்கணும்னா அதுக்கு திறமை இருக்கணும். அந்த திறமை இருக்க காரணத்துனால தான் யுவன் சங்கர் ராஜாவுக்கான ஒரு தனி கூட்டமே இங்க இருக்கு. அந்த கூட்டத்துல நானும் ஒருத்தன்.

இன்னும் எத்தன தலைமுறைகள் கூட யுவன் சங்கர் ராஜா போட்டி போட போறாருன்னு தெரியல, ஆனா போட்டின்னு வந்துட்டா அதுல ஜெயிக்க போறது யுவன் சங்கர் ராஜா தான். தமிழ் சினிமாவுக்கு ரீமேக் பாடல்கள அறிமுகப்படுத்தின பெருமையும் யுவன் சங்கர் ராஜாவையே சேரும். தாய்க்கு நிகரா ஆராரிராரோ பாட்டு போட்ட பெருமையும் யுவன் சங்கர் ராஜாவையே சேரும்.

ரோட்டில் நடந்து போற தேவதைகளுக்கு எல்லாம் ஒரு தேவதை பார்க்கும் நேரம்ன்னு பாட்டு போட்ட பெருமையும் யுவன் சங்கர் ராஜாவையே சேரும். ஒரு நாளைக்கு எத்தனையோ கனவுகள் வந்தாலும் ஒரு நாளைக்குள் எத்தனை கனவுன்னு அதற்கு பாட்டு போட்ட பெருமையும் யுவன் சங்கர் ராஜாவையே சேரும். தலை நிமிர்ந்து நடக்கிற ஒவ்வொருத்தருக்கும் வீராசுரா பாட்டு போட்ட பெருமையும் யுவன் சங்கர் ராஜாவையே சேரும்.

அன்பாய் இருக்கிற எல்லாருக்கும் அன்பே பேரன்பேன்னு பாட்டு போட்ட பெருமையும் யுவன் சங்கர் ராஜாவையே சேரும். சோ டோட்டலி யுவன் சங்கர் ராஜா வேற மாதிரி… அவருக்கு ஏத்த மாதிரி நாங்க வேற மாறி பாட்டு போட்ட பெருமையும் யுவன் சங்கர் ராஜாவுக்கே. இத்தன பெருமைகளை கொண்ட யுவன் சங்கர் ராஜா ஓட பிறந்தநாள் தான் இன்னைக்கு.

இத்தனை பெருமைகளை கொண்ட யுவன் சங்கர் ராஜாவிற்கு சூரியன் எப்எம் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Article By RJ Jo

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.