On Silambarasan TR’s birthday, let’s revisit his best performances! Here are the top 5 must-watch Tamil movies that showcase his acting brilliance and box office success. Silambarasan (STR) Best Tamil Movies to Watch – Silambarasan aka STR has delivered some of the finest films in Tamil cinema. Here’s a list of his best movies so far in 2025, featuring must-watch performances and box office hits. The popular Tamil movies which includes Manmadhan, Kovil, Vallavan, and more
சிலம்பரசன் (எஸ் டி ஆர்) – தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திர நடிகராக அறிமுகமாகி பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவராக உள்ளார். இவர் படங்கள் இளைஞர்கள், குடும்பங்கள் என பலருக்கான படங்களாக அமைந்து அணைத்து தரப்பு ரசிகர்களின் மனதை வென்று டாப் நட்சத்திர பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரது படம் வெளியாகினாலும் இல்லையென்றும் இவருக்கான மாஸ் மற்றும் ரசிகர்களின் பட்டாளம் என்றும் குறைவதில்லை.
இந்த பதிவில் சிலம்பரசன் நடித்த டாப் 5 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் மற்றும் தகவல்கள் உள்ளது, இதோ.
மன்மதன்

மன்மதன் – இயக்குனர் ஏ ஜே முருகன் இயக்கத்தில் சிலம்பரசன் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த திரில்லர் திரைப்படம். இப்படம் 2004 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக தமிழ் சினிமாவில் வாகை சூடியுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க ஜோதிகா, கவுண்டமணி, அதுல், சத்யன், சந்தானம் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான வரவேற்பு அதிகளவில் உள்ளது.
கோவில்

கோவில் – இயக்குனர் ஹரி இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடித்துள்ள அதிரடி – குடும்ப திரைப்படம். இப்படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால், ராஜ்கிரண், நாசர் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அந்த ஆண்டின் வெற்றி பட பட்டியலில் முன்னிலை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
வல்லவன்

வல்லவன் – நடிகராக பணியாற்றி வந்த சிலம்பரசன், 2006 ஆம் ஆண்டு வல்லன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானம், நயன்தாரா, ரீமா சென் என பல நட்சத்திரங்கள் முக்கிய கத்பாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகள் ஏற்படுத்தி பலரின் வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா – இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடித்துள்ள காதல் திரைப்படம். இப்படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, VTV கணேஷ் இப்படத்தில் நடித்ததன் மூலம் பலர் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இன்றும் பல இடங்களில் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
மாநாடு

மாநாடு – சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தினை இயக்கியுள்ளார். பல போராட்டங்களுக்கு பிறகு உருவான இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று ஹிட் படமாக அமைந்துள்ளது. சிலம்பரசன் திரைப்பயணத்தில் இப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.