VidaaMuyarchi: விடாமுயற்சி படத்தை இந்த காரணத்திற்காக கொண்டாட தவறும் ரசிகர்கள் – முழு விவரங்கள் இதோ. இந்த பதிப்பில் சமீபத்தில் பிப் 06, 2025ல் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இப்படத்தினை ஒரு சில அற்ப காரணத்திற்காக கொண்டாட மறுக்கின்றனர், சினிமா ரசிகர்கள். இதனை பற்றிய முழு தகவல் மற்றும் விவரங்கள் இதோ.

விடாமுயற்சி
அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் ஷார்ஜா, ரெஜினா என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம், விடாமுயற்சி. இப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2025 பிப் 06ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
விமர்சனம்

விடாமுயற்சி திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வெளியான முதல் ஷோ முடிவில் இருந்து பலர் இப்படம் தொடர்பான தங்களின் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சராசரியாக இப்படத்திற்கு (3.5/5) ரேட்டிங் அளிக்கப்பட்டு வருகிறது. மாஸான அஜித் மற்றும் அதிரடி படமாக ஏதிர்பார்த்து சென்ற ரசிகர்கள் இப்படத்தால் ஏமார்ந்து (3/5) ரேட்டிங்க்கு குறைவாக மதிப்பிடுகின்றனர். ஆனால் திரைக்கதை, இப்படம் பேசியுள்ள கருத்துக்கள் மற்றும் ஒரு மாஸான நடிகர் இப்படி ஒரு நல்ல கருத்து அடங்கிய படத்தில் நடித்துள்ளார் என சிலர் விடாமுயற்சி படத்திற்கு (4/5) ரேட்டிங்கிற்கு மேல் தங்கள் ரேட்டிங் அளித்துள்ளனர்.
அஜித் குமாரின் படங்கள்
நடிகர் அஜித் குமார் தான் நடிக்கும் படங்களில் சமூக அக்கறை உடன் சில கருத்துகள் அடங்கிய படங்களில் நடித்து வந்துள்ளார். துணிவு, வலிமை, நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் போன்ற படங்கள் வரிசையில் தற்போது ‘விடாமுயற்சி’ திரைப்படமும் இணைந்துள்ளது. இப்படம் கணவன் – மனைவி இடையே இருக்கக்கூடிய காதல் மற்றும் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
அஜித் குமார் திரைப்பயணத்தில் ஒரு உச்ச நடிகராக பயணித்து வரும் காலகட்டத்தில் முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து பல குடும்பங்கள் மற்றும் பெண்களின் மனதை வென்றுள்ளார், அஜித் குமார்.

விடாமுயற்சிக்கு என்ன சிக்கல்
ஒரு ஹாலிவுட் சினிமா தரத்தில் இப்படம் உருவாகி வருவதாக எழுந்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் மீதான ஏதிர்பார்ப்புகளை எகிற வைத்த டீசர் / டிரைலர், விடாமுயற்சி படத்தினை ஒரு ஹாலிவுட் படமாகவே ரசிகர்களின் எண்ணங்களை மாற்றியிருக்கிறது.
காதல், கணவன் – மனைவி உறவு பற்றி பேசியிருக்கும் படமாக இருந்ததால் பலருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அடைந்தது, விடாமுயற்சி. ஒரு மாஸான நடிகர் பல காட்சிகளில் பலரிடம் அடிவாங்குவதும் பலரிடம் கெஞ்சுவதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இரண்டு வருட காத்திருப்பிற்கு பின் இப்படம் வெளியாகும் நிலையில், விடாமுயற்சி நடிகர் அஜித்குமாரின் ரசிகருக்கான படமாக இருக்கும் என எதிர்பார்த்த நபர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாக மாறி இருக்கிறது.
இதுவே விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருக்கு மாறாக தமிழ் சினிமா இரண்டாம் கட்ட நடிகர்கள் நடித்திருந்தால், குறிப்பாக மகிழ் திருமேனியின் லக்கி ஸ்டார் அருண் விஜய் நடித்திருந்தால் இப்படம் பலருக்கு கொண்டாட்டமாக அமைந்திருக்கும்.
மாஸ் நடிகர் அஜித் குமாருக்கு எதிராக இருக்கும் சில காட்சிகளை நீக்கி இப்படத்தின் கருத்துகள் மற்றும் திரைக்கதை கொண்டு இப்படத்தினை பார்த்தால் விடாமுயற்சி பலர் பாராட்டுகளை வெல்லும் சிறந்த படமாகவே இருக்கும்.