Specials Stories

பாடகர் ஹரிஹரன் பற்றி தெரியாத சில அரிய தகவல்கள்

singer hariharan
singer hariharan

பாடகர் ஹரிஹரன் இந்திய இசை உலகில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்தவர். அவரது கறியர் வளர்ச்சி, இசை பிரியர்கள் தெரியாத சில அரிய தகவல்கள் மற்றும் அவரின் சாதனைகள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


இந்திய திரை இசை பாடகர்களில் மிக முக்கியமானவராகவும் கஜல் மற்றும் கர்நாடக சங்கீதங்களில் தலைசிறந்த பாடகர் ஆகவும் திகழ்கின்றவர் பாடகர் ஹரிஹரன். தமிழ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவரான ஹரிஹரனின் தந்தை ஹெச் ஏ எஸ் மணி பல கர்நாடக பாடகர்களை உருவாக்கியவர் அவருடைய அம்மா அலமேலு மணி 40 ஆண்டு காலம் சங்கீத ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். ஹரிஹரனின் தந்தையை ஹெச் எ எஸ் மணி தனது 40 வது வயதில் மரணம் அடைந்ததற்கு பிறகு அன்னை அலமேலுமணியின் வளர்ப்பில் வளர்ந்த ஹரிஹரன், தன்னுடைய பள்ளி படிப்பை மாதுங்காவில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியிலும் தன்னுடைய கல்லூரி படிப்புகளை எஸ் ஐ எஸ் கல்லூரி மற்றும் புனித சேவியர் கல்லூரியிலும் படித்தவர்‌ ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் பாடகராக அறிமுகமானார்.இவர் பாடிய முதல் பாடலான “அஜித் சா நெஹே” என்ற பாடலுக்கு உத்தரப்பிரதேச அரசின் மாநில விருது கிடைத்தது. அதோடு மட்டுமல்லாமல் தேசிய விருதுக்கு இந்த பாடல் பரிந்துரைக்கப்பட்டது. தமிழில் முதன்முதலாக 1992 இல் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த ரோஜா படத்தில் தமிழா தமிழா என்ற பாடலை பாடினார். பிறகு 1995இல் பம்பாய் திரைப்படத்தில் உயிரே உயிரே என்ற பாடலை பாடியதற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகருக்கான விருதை பெற்றார்.

ஏ ஆர் ரகுமானின் இசையில் பல பாடல்களை ஹரிஹரன் பாடியிருக்கிறார். முத்து, மின்சார கனவு, ஜீன்ஸ் ,முதல்வன் ரங்கீலா, இந்திரா, இந்தியன், இருவர், அன்பே ஆருயிரே, கண்களால் கைது செய், சிவாஜி, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு எந்திரன் போன்ற பல பாடல்களை ஏ ஆர் ரகுமான் இசையில் பாடி இருக்கின்ற ஹரிஹரன் இளையராஜாவின் இசையில் பல புகழ் பெற்ற பாடல்களை பாடி இருக்கிறார் குறிப்பாக காசி படத்தில் பல பாடல்களை பாடி இருக்கின்றார். அதோடு காதலுக்கு மரியாதை படத்தில் அவர் பாடிய “என்னை தாலாட்ட வருவாளா” என்ற அந்த பாடல் இன்றும் புகழ்பெற்ற அவர் பெயரை சொல்லக்கூடிய பாடலாக அமைந்திருக்கிறது. 1998 இல் அனுமாலிக் இசையில் பார்டர் என்ற ஹிந்தி படத்தில் பாடியதற்காக தன்னுடைய முதல் தேசிய விருது பெற்றார். அதேபோன்று தன்னுடைய இரண்டாவது தேசிய விருதை ஜோக்குவா என்ற மராத்தி படத்தில் பாடியதற்காக தேசிய விருதை இரண்டாவது முறையாக பெற்றார். 500க்கும் அதிகமான தமிழ் பாடல்களையும் 200க்கும் அதிகமான இந்தி பாடல்களையும் பாடி இருக்கின்ற ஹரிஹரன் மலையாளம், கன்னடம், தெலுங்கு ,மராத்தி, பெங்காலி, ஒடியா, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடியிருக்கின்றார்.

இப்படி திரை இசை பாடல்கள் மட்டும் அல்லாமல் அவருடைய அடையாளமாக விளங்கி கஸல் இசையில் 30க்கும் அதிகமான ஆல்பங்களை வெளியிட்டு இருக்கின்ற ஹரிஹரன் 1991 இசையமைப்பாளரும் பாடகருமான “லெஸ்லி லூயிசுடன் “இணைந்து “கலோணிக்கல் கசின்ஸ்” என்ற ஆல்பத்தை வெளியிட்டு புகழ்பெற்றார் இருவரும் இணைந்து மீண்டும் 1998ல் தி வே டு இட் என்ற ஆபத்தையும், 2001 இல் ஆத்மா என்ற ஆல்பத்தையும் , 2012 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் என்ற ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளனர்.பல மேடைக்குச் செய்திகளையும் பல இசை நிகழ்வுகளையும் நடத்தி இருக்கின்ற ஹரிஹரனுக்கு 2004 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து இந்திய அரசு அவரை கௌரவித்துள்ளது. இரண்டு தேசிய விருதுகள் ,கர்நாடக மாநில அரசின் விருது, தமிழ்நாடு மாநில அரசு விருது, நந்தி விருது, கேரளா அரசின் விருது, பிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி இருக்கும் ஹரிஹரன் என்ற ஆகச் சிறந்த பாடகரின் பிறந்த தினம் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி இன்றைய தினத்தில். இன்னும் பல பாடல்களையும் ஆல்பங்களையும் வெளியிட்டு இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும் என்று அவருடைய பிறந்தநாள் வாழ்த்தாக சூரியன் எஃப் எம் தன் வாழ்த்துக்களை அவருக்கு காற்றலையில் அனுப்பி வைக்கிறது.

Aricle by கே எஸ் நாதன்

About the author

Sakthi Harinath