அலைபாயுதே திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்து பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி இனைந்து நடிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளது.
ஒருத்தர் யார்கிட்டயாவது போய் 80’s வந்த நல்ல Tamil love movie சொல்லுங்கன்னு கேட்டா மூன்றாம் பிறை, பயணங்கள் முடிவதில்லை, மௌன ராகம் இந்த மாதிரி movies ah சொல்லுவாங்க. அதே மாதிரி 90’s ல வந்த Tamil love movies சொல்லுங்க அப்படின்னு கேட்டா ரோஜா, காதல் கொண்டேன், பாம்பே, ஜீன்ஸ் இந்த மாதிரி movies ah சொல்லுவாங்க. 2000’s ல வந்த best Tamil love movie சொல்லுங்க அப்படின்னு யார்கிட்ட யார் போய் கேட்டாலும் அவங்க மனசு அலைபாயும் அந்த movie name ah சொல்ல. அப்படி அவங்க மனசு அலைபாயுஞ்சுக்கிட்டே எந்த movie ah சொல்லு அப்படினா கண்டிப்பா அலைபாயுதே movie ah தாங்க சொல்லுவாங்க.
கிட்டத்தட்ட இந்த movie வந்து 25 வருஷம் ஆகிடுச்சு. April 14, 2000 ல நான் இந்த படம் release ஆனுச்சு. இந்த படம் வந்து இத்தனை வருஷம் ஆயிருந்தாலும் இப்ப பார்த்தாலும் ஏதோ புதுசா புது படத்த பாக்குற மாதிரி தான் ஒரு Feel குடுக்கும். இந்த movie ஓட hero கார்த்திக் ( மாதவன் ). நல்ல துரு துருனு, Jolly ahh friends ஓட கெத்தா சுத்திட்டு இருக்க ஒரு software engineer. Heroine பேர் சக்தி ( ஷாலினி ). அழகான பொண்ணு, கொஞ்சம் அதிகமா வாய் பேசி வம்பு இழுக்கற பொண்ணு. முக்கியமா அப்பா ஓட செல்ல பொண்ணு and Medical College student. இந்த ஒரு வசனத்தை படிச்சா கண்டிப்பா அந்த movie ஓட scenes உங்களுக்கு ஞாபகத்துக்கு வரும். ” சக்தி, நான் உன்னை விரும்பல, உன் மேல ஆசை படல, நீ அழகா இருக்கன்னு நினைக்கல ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு, யோசிச்சு சொல்லு. “…. ப்பா… என்ன scene இல்ல… மணிரத்னம் sir

காதல பத்தியும், காதல் திருமணத்தை பத்தியும், காதல் திருமணத்துக்கு அப்புறம் வாழ்க்கையில என்னென்ன நடக்கும் அப்படின்றத பத்தியும் ரொம்ப அழகா இந்த படத்துல சொல்லி இருப்பாரு. பல வருஷ காதல் வாழ்க்கைய 2 ½ மணி நேரத்துல அழகா சொல்லிட்டாரு. முக்கியமா இந்த படத்துல வரக்கூடிய பாடல்களை பத்தி சொல்லியே ஆகணும். ஒவ்வொரு பாட்டும் கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கணும் அப்படின்னு தான் தோணும். என்றென்றும் புன்னகை, பச்சை நிறமே, யாரோ யாரோடி,
எவனோ ஒருவன், செப்டம்பர் மாதம், காதல் சடுகுடு, சிநேகிதனே, இந்த படத்துல இருக்கக்கூடிய எல்லா பாட்டுமே பயங்கர hit uhh னு தான் சொல்லியாகணும். இந்த படத்துல இருக்கக்கூடிய நிறைய பாட்ட வைரமுத்து தான் எழுதி இருக்காரு. simple ah சொல்லனும்னா “வைரமுத்துவின் வரிகள் மனதை அலைபாய செய்யும், காதல் கனாக்களை தூண்டும்!” அப்படின்னு தான் சொல்லணும். இந்த படத்தோட music director ஏ ஆர் ரகுமான் அப்டின்றது நம்ம எல்லாத்துக்குமே தெரியும். இந்த படத்துல இவருடைய இசை எப்படி இருந்தது அப்படின்னா “அலைபாயுதே… காதலின் அழகையும், உணர்வுகளின் ஆழத்தையும் ஏ ஆர் ரகுமான் இசையில் இசைக்க”. இந்த படத்தை பத்தி, பாட்ட பத்தி, music ah பத்தி இந்த மாதிரி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். இன்னும் தமிழ் சினிமால எத்தனை காதல் கதை வந்தாலும் சரி அலைபாயுதே movie ah யாராலும் மறக்க முடியாது. இது ஒரு romantic feel good movie.