காஞ்சனா 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இப்படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளது.
ஒரு காலத்துல, பேய் படத்துக்கெல்லாம், “சிறுவர்கள், இதயம் பலவினமானவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டாம்!” அப்படின்னு விளம்பரம் செஞ்சுட்டு இருந்த காலம் போயி.. அப்பா, அம்மா, குழந்தைன்னு குடும்பம் குடும்பமா போய் சிரிச்சு enjoy பண்ண படம் தாங்க முனி 3 – காஞ்சனா 2. இது முனி series ஓட 3வது பாகம். முனி 1 வந்த புதுசுல, இந்த படம் மத்த பேய் படங்கள்ல இருந்து தனித்துவமா தனிச்சி இருந்து, oru trend setter-ஆ மாருச்சு. அதுக்கப்பறம் வந்த படம் தான் முனி 2 – காஞ்சனா. இந்த படத்துல வர theme music இருக்கே… மறக்க முடியுமா என்ன! அந்த வெற்றி வரிசையில அடுத்ததா வந்த படம் தான் முனி 3 காஞ்சனா 2. April 17, 2015 ல தான் இந்த படம் release ஆச்சு. கிட்டத்தட்ட பத்து வருஷம் ஆயிடுச்சு.
இந்த படத்துல வாயா என் வீரா அப்படின்ற பாட்டு, படம் வந்து பத்து வருஷம் ஆயிருந்தாலும் இன்னுமும் Trend ல தாங்க இருக்கு. அதுல சக்திஸ்ரீயோட voice இருக்கே அப்படி இருக்குங்க கேட்கவே. அந்த பாட்டு எனக்கு தெரிஞ்சு அவங்கள தவிர வேறு யாராலும் best ah பாடி இருக்க முடியாது. காஞ்சனா படத்தோட ஒவ்வொரு பாகத்துலயும் கண்டிப்பா ஒரு famous ஆன dialogue இருக்கும். இந்த படத்தோட famous ஆன dialogue னா ” பேய்க்கும் பேய்க்கும் சண்டை அத ஊரே சேர்ந்து வேடிக்கை பாக்குது ” அப்படின்றதுதான். உண்மைய சொல்லப்போனா இந்த ஒரு dialogue ஆகவே தான் நிறைய பேர் இந்த படத்தை பாத்தாங்க. அந்த scene இருக்கே ப்ப்பா… பயங்கர mass ah இருக்கும்.

பொதுவா horror movie நாலே, பேய்க்கு ஒரு flashback இருக்கும்… அதே மாதிரி இந்த படத்துல ஒரு நல்ல flashback ah வச்சிருப்பாங்க. லாரன்ஸ் மாஸ்டர் acting ல சும்மா பட்டய கெலப்பிருபாரு. 1st half ல, பெரியவங்கல இருந்து குழந்தை வரைக்கும் எல்லாரும் enjoy பண்ணி சிரிக்கிற மாதிரி தான் comedy scenes லாம் workout பண்ணிருப்பாங்க. 2nd half ல அந்த குழந்தை பேய்க்கு ஒரு song இருக்கும், அதெல்லாம் theatre-ல சும்மா whistle sound தான்.. அந்த song la கோவை சரளா mam acting இருக்கே செம்மையா இருக்கும். அந்தப் பாட்டுல அவங்க பயப்படுற மாதிரி நடிச்சிருந்தாலும் அவங்க பயப்படுற மாதிரி நடிச்சதை பார்த்து தியேட்டர்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க அப்படின்னு தான் சொல்லணும். அந்த அளவுக்கு அவங்களோட performance மாசா இருந்தது. அப்புறம் flashback, climax fight னு படம் சும்மா jet speed ல போயி முடிஞ்சுரும்.
இந்த படத்தோட மிக பெரிய வெற்றி என்ன தெரியுமா nga? படம் முடிஞ்சு end title card ல, “முனி 4 – காஞ்சனா 3” னு வரப்போ theatre ல whistle sound-ம், கைதட்டும் அடங்கவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு. என்ன பொறுத்த வரைக்கும், இது தான் இந்த படத்தோட success!