Specials Stories

எஸ் ஜானகி ஸ்பெஷல் 2025 – இசை தென்றல் உதித்த தினம்

s janaki
s janaki

எவ்ளோவோ குரல்கள் நம்ம கேட்டாலும் என்னைக்கும் நம்ம மனசோட பிரதிபலிக்குற குரலா ஒரு குரல் தான் எதிரொலிக்கும்…அந்த குரல் தான் ஊரு சனம் உறங்குனாலும் உறங்காத நம்ம மன கவலைய சொல்லும்,அந்த குரல் தான் தென்றலா நம்ம மனச உரசி ஆறுதல் தரும்,மாறுதல் தரும்.இயற்கையோட அழகு,இசையோடு இனிமை,தனிமையின் வலி,சொல்ல துடிக்கும் காதல்,சொல்ல முடிய உணர்வுன்னு எல்லாத்தையும் சொன்ன அந்த குரல் என்னைக்கும் உயிரோட கலந்திருக்கும்.இதெல்லாம் மட்டுமில்லாம அம்மாவோட அரவணைப்பை அந்த குரல் குடுத்ததால தான் அவங்கள அன்பா ஜானகி அம்மா னு சொல்றமோ என்னமோ.பின்னணி பாடகி S.ஜானகி அவர்களுக்கு இன்னைக்கு பிறந்த நாள்.

இந்திய சினிமாவுல முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானாங்க, தொடர்ந்து, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துருக்கங்க.ஜானகியின் முழு பெயர் சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி. அவரது அப்பா சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி மற்றும் தாய் சத்யவதி. குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற கிராமத்தில் தான் 1938ஆம் ஆண்டுல ஜானகி பிறந்தாங்க.

பாடகி ஜானகி எவ்ளோவோ பாட்டு பாடி இருந்தாலும் அவங்கள பிரபலமாக்குன பாடல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இயக்கிய சிங்கார வேலனே தேவா படத்தில் ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாட்டு தான்.அந்த பாட்டுக்கு நாதஸ்வரம் வாசித்த காரைக்குருறிச்சி அருணாச்சலம் தனக்கு போட்டியாக பாடல் பாட யாராவது இருக்கிறார்களா என்று சவால் விட்டார். இதுனால இந்த பாட்டுக்காக லதா மங்கேஷ்கரையும் கூட அணுகியுள்ளார்கள்.ஆனா கடைசியில இந்த பாட்ட ஜானகிதான் பாடுனாங்க. இந்த பாட்ட அவங்க பாடுறப்ப அவங்க குரலும், நாதஸ்வரத்தோட இசையும் ஒன்றுபோல் இருக்கும்னு சொல்லிருக்காங்க.

இவங்க குரல் மூலமா அந்த பாட்டுக்குள்ளையே magic பண்ணிருவாங்க.சில நேரம் mimicry யும் பண்ணிடுவாங்க. 16 வயதினிலே படத்துல வர ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாட்டுக்கு நடுவுல வர பாட்டி குரல்ல “பழைய நினைப்பு தான் பேராண்டி என்று மாத்தி பாடியிருப்பாங்க”.இது மட்டுமா ஆண் குரலிலுல் பல பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. நெஞ்சத்தை கிள்ளாதே படத்துல வர வளர் இளம் சிறுவனின் குரல்ல “மம்மி பேரு மாரி பாடலை பாடியிருப்பாங்க”. பாட்டுக் கச்சேரி ஒண்ணுல சுசிலாவுடன் இணைந்து, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை, டி.எம்.சவுந்திரராஜன் குரலில் பாடி கைத்தட்டை பெற்றார். இப்படி வெவ்வேறு குரல்களில் பாடினாலும், குழந்தை அல்லது மழலை குரலில் பாடுவது ஜானகிக்கு கை வந்த கலை. சிறு வயது சிம்புவுக்காக ஐ ஏம் ஏ லிட்டில் ஸ்டார் பாடல் இவரது திறமையை வெளிப்படுத்தியது.

கண்மணி அன்போடு காதலன்,சுந்தரி கண்ணால் ஒரு செய்தி ,மச்சானை பாத்திங்களா இந்த பாடல் எல்லாம் காலம் தாண்டியும் காதோரும் கேட்டுட்டே இருக்கும்.இசை என்பது ஒளி மட்டுமில்ல அது இன்னொரு உலகம். அந்த உலகத்துல ஒவ்வொரு முறையும் நம்மள பயணிக்க வைக்குற அந்த குரல் என்றும் நம்ம நினைவுகளோடே உதிரமா ஓடிட்டே இருக்கும். பாடகி S.ஜானகிக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By – RJ MOZHIYAN (PONDY)

About the author

Sakthi Harinath