Specials Stories

Happy Birthday Madhavan: Celebrating the Charming Star Journey from Alaipayuthey to Rocketry

madhavan
madhavan

Madhavan – லைஃப்ல கனவுங்கிறது எப்ப வேணாலும் எப்படி வேணாலும் வரும். ஆனா, அந்த கனவு பாதையில போறது, கடைசி வரையும் விட்டுக் கொடுக்காம போறது அப்படிங்கறது ரொம்ப முக்கியம். மாதவன் பெரு கேட்டாலே “சாக்லேட் பாய்னு” சொன்னாதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்படி லைஃப்ல ஒரு சின்ன இடத்துல ஏற்பட்ட spark nala இன்னைக்கு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச “சாக்லேட் பாய்” தான் மாதவன். இன்ஜினியரிங் படிப்பு படிச்சுட்டு Public Speakingla இன்ட்ரஸ்ட் ஆகி கடைசில டெலிவிஷன்ல நடிக்க ஆரம்பிச்சாரு…

அவருக்கு முதல் முதலில் பேர் கெடச்சது அவர் நடிச்ச ஹிந்தி சீரியல் தான். சின்ன தொடக்கமா இருந்தாலும் அது பெரிய பாதையை உருவாக்கி கொடுத்திருக்கு அவருக்கு. அவர, தமிழ் மக்கள் முதல் முதல்ல கொண்டாட ஆரம்பிச்சது அவருடைய முதல் படமான “அலைபாயுதே”. இயக்குனர் மணிரத்தினம் அவருடைய இயக்கத்துல, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில, அலைபாயுதே மூவி அவருக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. அதுவும் படத்தோட ஓப்பனிங்கில, காதுல ஹெட்செட் போட்டுட்டு, “என்றென்றும் புன்னகை” பாட்டுல என்ட்ரி கொடுப்பாரு!! அங்க தான் தமிழ் ரசிகர்கள் மனசுல இடம் பிடிச்சாரு.

“அலைபாயுதே” படத்துக்கு முன்னாடி மாதவன் இருவர் மூவிக்கும் ஆடிஷன்லாம் அட்டென்ட் பண்ணி இருக்காரு. “அலைபாயுதே” படம் மூலமா அடுத்தடுத்து, பல பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. அப்படி அவர் நடிச்சது தான் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில “மின்னலே” படம். அவரோட நடிப்பால தமிழ் ரசிகர்கள் மனசுல ஆழமா பதிய ஆரம்பிச்ச தருணம்.

காதல் வேடங்கள்ல நடிச்சது மட்டும் இல்லாம “அன்பே சிவம்”, “ஆயுத எழுத்துன்னு”, அவர் நடிப்புக்கு பாராட்டு குவிய ஆரம்பிச்சது. ஒரு பக்கம், தமிழ் படங்கள்ல அவருடைய நடிப்புக்கு பலவித பாராட்டுகள் கிடைச்சது. இன்னொரு பக்கம், ஹிந்தி படங்களையும் அவருடைய பெயரை சம்பாதிக்க ஆரம்பிச்சாரு.

அவரோட பலவிதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஆரம்பிச்சாரு. “யாவரும் நலம்”, “எவனோ ஒருவன்” இந்த மாதிரி தன்னோட குணச்சித்திரமான நடிப்பையும் வெளிப்படுத்தினார். அதுமட்டும் இல்ல “தம்பி” படைத்துல ஒரு சீன்ல கண் சிம்மிட்டமா நடிச்சி எல்லாரையும் ஆச்சரிய படுத்திருக்காரு. இவர் நடிச்ச படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆயிருக்கு.

இவரோட நடிப்புல வெளியான “இறுதி சுற்று”, “விக்ரம் வேதா” படங்கள் பலவிதமான விமர்சங்கள் இருந்தாலும் விமரிசன ரீதியாகவும் சரி, வணிக ரீதியாகவும் சரி, வெற்றி பெற்றிருக்கு.

IIFA, SIIMA, Filmfare nu பல விழாக்கள்ல, “சிறந்த நடிகருக்கான விருதையும்” வாங்கி இருக்காரு.

சாக்லேட் பாய் மாதவன், நடிகர் மட்டுமில்ல, திரை கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், கடைசியா அவர் திரைப்பட இயக்குனராகவும் மாறிருக்காரு. “Rocketry: The Nambi effect” படம் மூலமா இயக்குனரா அறிமுகமானாரு. அதே சமயம், அந்த படத்துல இந்திய ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனாவும் நடிச்சிருந்தாரு. அதுக்காக, உலக அளவுல பாராட்டையும், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் அவருக்கு கிடைச்சுது.

நடிகரா மட்டுமில்லாம, தன்னோட படங்கள்ல எழுத்தாளரா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கறது, அப்புறம் திரைப்பட தயாரிப்பாளராகவும் வொர்க் பண்ணி இருக்காரு.

இவரோட முதல் வெற்றியே இவரோட முதல் படம் தான். அந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது வாங்கனாரு. அதுமட்டும் இல்ல, ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய நடிப்பு மூலமா சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், இப்ப அவர் சிறந்த இயக்குனருக்கான விருதையும் வாங்கி இருக்காரு.

இவரோட இந்த பயணம் தொடரட்டும்.

Article By – RJ KEERTHI

About the author

Sakthi Harinath