தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய 7 சைக்கோ கதாபாத்திரங்கள் – தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள 7 சைக்கோ கதாபாத்திரங்கள் லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் அஜித் குமாரின் வாலி, சிலம்பரசனின் மன்மதன் என சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான எலெவன் பட பெஞ்சமின் கதாபாத்திரம் வரை ரசிகர்களின் மனதை வென்ற தமிழ் திரைப்பட சைக்கோ கதாபாத்திரங்கள் லிஸ்ட், இதோ.
மன்மதன்
காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் ஏமாற்றம் அடைந்து தனது உயிரை விட்ட தம்பியின் இழப்பிற்காக காதல் என்ற பெயரில் தவறு செய்யும் பெண்களை தேடி கொள்வதே இந்த படத்தின் கதை. இந்த கொலையாளி கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார்.

வாலி
ஒரே உருவமுடைய இரட்டையர்கள் – அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி, ஆனால் மனதளவில் கூர்மையானவர். தனது காதலியை அடைய அநீதி வழியில் அவர் எடுக்கும் முயற்சிகள் தான் இப்படத்தின் கதை.

அந்நியன்
ஒரே நபருக்குள் மூன்று நபர்களின் ! ஒழுக்கம், அமைதி, வன்மம் – இவை மூன்றும் clash ஆகும் மன அழுத்தத்தில் வாழும் ஒருவரின் சித்தவியாதி.

எலெவன்
நேர்மையான இளைஞர் & போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன், சீரியல் கொலைக்கு எதிராக நுணுக்கமான சதிகளை வெல்லும் புத்திசாலி ஹீரோவாக அறியப்படுகிறார். ஆனால் இந்த கொலைகளுக்கு பின்னால் ரகசியமாக இயங்கும் நபராகவும் ஹீரோ இருக்கிறார். அவரின் கோபத்தை ஞாயமாக எடுத்துக்காட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இப்படத்தின் இயக்குனர்.

ஆளவந்தான்
சிகிச்சையிலிருந்து வெளியேறும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இரட்டையர்களில் ஒருவர் தீயவன் – ஒருவர் நல்லவன். இப்படம் மன அழுத்தம் மற்றும் குழந்தைப் பருவ துன்பங்கள் சார்ந்து இருக்கக்கூடிய கதையின் மையம்.

காதல் கொண்டேன்
மிக சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு எளிமையான மாணவராக இருக்கும் தனுஷ், தனது காதலுக்காக இவர் செல்லும் தவறான வழி இறுதியில் இவருக்கு எப்படி ஒரு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதே இப்படத்தின் கதை.

சிகப்பு ரோஜாக்கள்
மர்மமான கொலை வழக்குகளில் சிக்கிய, தடய விசாரணை செய்யும் தனி மனிதர்.


