Specials Stories

சனி பகவானை ஏமாற்றிய விநாயகர்

Lord Ganesha tricked Lord Shani
Lord Ganesha tricked Lord Shani

நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிடிக்கவேண்டும் இதுவே அவரின் பணி, இது மனிதர்களுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் பொருந்தும். அப்படி விநாயக பகவானை பிடிப்பதற்கான நேரம் வந்தது, சனி பகவானும் விநாயகரை பிடிக்க வந்தார், சனி பகவானை பார்த்த விநாயகர் என்ன விஷயமாக இங்கு வந்தீர்கள் என்று கேட்டார், அய்யனே மானுடர் மட்டும் அல்ல தேவர்களையும் நான் பிடிக்கும் காலம் உண்டு, இப்பொழுது உங்களை பற்றும் நேரம் எனவே எனது கடைமையை ஆற்ற நான் வந்தேன் என்று கூறினார்.

இதை புரிந்து கொண்ட விநாயகர், நான் இப்பொழுது முக்கிய பணியில் உள்ளேன் நீங்கள் பிறகு வாருங்கள் என்று சனி பகவானிடம் கூறினார், இதனை ஒப்புக்கொண்ட, சனி பகவானும், சரி நான் நாளை வருகிறேன்.

ஆனால் அதற்கு என்ன உத்தரவாதம்? நீங்கள் பேச்சை மாற்றினால் என்ன செய்வது என விநாயகரிடம் சனி பகவான் கேட்க. விநாயகரும், “நான் நாளை வருகிறேன்!” என்று என் முதுகில் எழுதி விட்டு செல்லுங்கள் அதுவே உங்களுக்கு உத்தரவாதிராம் என்று புதுசாலித்தனமாக கூறினார். சனி பகவானும் அப்படியே செய்தார.. மறுநாள் சனிபகவானும் விநாயகர் பற்ற வந்தார், விநாயகர் உடனே முதுகை காட்ட, “அதில் சனி பகவான் எழுதிய – நான் நாளை வருகிறேன்!”

என்ற வாக்கியத்தை காட்ட, விநாயகர் நீங்கள் தானே நாளை வருகிறேன் என்று எழுதி இருக்கீறீர்கள். அதனால் இன்று சென்று நாளை வாருங்கள் என்று கூற, தினமும் சனிபகவான் விநாயகரை பற்ற செல்ல, அவரும் முதுகை காட்ட, இதுவே தொடர்கிறது.. சனிபகவானுக்கு வாயில் சனி தானே! முழுமுதற் கடவுளான விநாயகரை சனி பகவானால் பற்ற முடியவில்லை..

இதுவே பிற்காலத்தில் ஒரு காரியத்தை செய்ய முடியாததிற்கும் ஒருவரை தந்திரமாக சமாளிப்பதிற்கும் “முதுகை காட்டி விட்டாய்!” என்று சொல்லும் வழக்கம் வந்திருக்குமோ!… மேலும் ஒருவரின் ஜாதகத்தில் சனி பற்றிய காலத்தில், விநாயக பகவானை வழிபடுவது மாற்றத்தை கொடுப்பதாகவும் நம்பப்படுகிறது.

Article By – Rj Hassini, Trichy

About the author

Sakthi Harinath