மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பு, அசைக்க முடியாதவைகளே இவருடைய படைப்பு, தமிழ் சினிமா துறையின் தங்க மகனாய், நமக்கு ஒரு தளபதியாய், ஒரே தலைவராய், ஒரே மன்னனாய், கொடிகட்டி பறக்கும் முடி சூடா மன்னன்!
ஒரு தனிநபர் தான், ஆனா அவர பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் ஏகப்பட்டது இருக்கு. சினிமா ன்னு சொன்ன உடனே, ஸ்டைல்னு சொன்னவுடனே, வாயிலிருந்து வர அடுத்த வார்த்தை actor ரஜினி அப்படின்றதா தான் இருக்கும். கலைமாமணி விருது (1984), பத்ம பூஷன் (2000),ராஜ்கபூர் விருது (2007), பத்ம விபூஷன் (2016), நந்தி தேசிய விருது (2016), தாதாசாகெப் பால்கே விருது (2019) அப்படின்னு ஏகப்பட்ட விருதுகள் வாங்கிய நடிகர் ரஜினி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் இன்னைக்கு. ரஜினி, அவருடைய பிறந்தநாள மறந்தாலும் கூட, சினிமா துறையும், சினிமாவ விரும்புற ஆட்களும் என்னைக்கு இவரோட பிறந்தநாளை மறக்கவே மாட்டாங்க. ஏன்னா அப்படியாப்பட்ட முக்கியமான நாள் தான் இந்த நாள் (Dec – 12). இவருடைய வாழ்க்கை கதை கண்டிப்பா பல ஆட்கள இன்ஸ்பயர் பண்ணும், இவர ரோல் மாடலா வச்சு வாழ்க்கையில முன்னேறின பல ஆட்கள் உண்டு. ஒரு குட்டி கதையா இவருடைய வாழ்க்கை பயணத்த பாக்கலாமா?

ரஜினியோட உண்மையான பெயர் என்ன தெரியுமா? சிவாஜி ராவ் கெய்க்வாட். பெங்களூர்ல பஸ் கண்டக்டராக இருந்த இவரு, பல கனவுகளோட சினிமா துறையில சாதிக்கணும்னு சென்னைக்கு வராரு. ஆரம்ப கட்டத்துல அவர் சந்திச்ச சவால்கள் ஏகப்பட்டது. ஊரு புதுசு, கையில போதுமான அளவுக்கு பணமும் இல்ல, அந்த அளவுக்கு தமிழும் தெரியாது, இதுக்கு நடுவுல ஏகப்பட்ட உருவ கேலிகள், கருப்பா இருக்க, சராசரி உயரம் தான் இருக்க அப்படின்னு நிறைய விமர்சனங்கள எதிர் கொண்டாறு.இவரு ஆரம்ப கட்டத்துல கதாநாயகரா படத்துல அறிமுகமாகல, கே. பாலச்சந்தர் அவர்கள் ரஜினிய ஒரு குணச்சித்திர நடிகரா தான் படத்துல முதல் முதலா அறிமுகப்படுத்தினாரு. அந்த படம் தான் “அபூர்வ ராகங்கள் “, ஆரம்ப காலகட்டத்துல சின்ன சின்ன கதாபாத்திரம் பண்ணாரு, அப்புறம் சில படங்கள்ல வில்லனா நடிச்சாரு. ஒரு முழு கதாநாயகனா படத்துல அறிமுகமாகிறதுக்கு இவருக்கு ரொம்ப காலமானது. 1978 வது வருஷம் “பைரவி ” அப்படின்ற படத்துல முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சாரு. அதுக்கப்புறம் அவரு எல்லா படத்திலும் கதாநாயகனா நடிச்சாரு. “உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைச்சிருச்சு” அப்படின்ற மாதிரியே எல்லா படங்களுமே மக்கள் மத்தியில அதிக வரவேற்பையும் பெற்றது. நம்ம எங்க இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட சூழ்நிலையில இருந்தாலும் சரி, நம்மளோட கனவ அடையறதுக்காக விடாம முயற்சி பண்ணி, விடாம உழைச்சா கண்டிப்பா நம்மளோட கனவு கைக்கூடி வரும் அப்படின்றதுக்கு ஒரு பெரிய உதாரணம் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். அன்னைக்கு அவரு விதைத்த விதை, சில வருஷத்துல “சூப்பர் ஸ்டார்” அப்படின்ற பிரம்மாண்ட பட்டத்த மக்கள் மூலமா பெற்றாரு. சின்ன சின்ன கதாபாத்திரங்கள் பண்ணி, வில்லனா நடிச்சி, அப்புறம் அசைக்க முடியாத ஒரு கதாநாயகனா மாறி சினிமா துறையில ஒரு பெரிய சரித்திரம் படைச்சது இவரை மட்டும் தான் சேரும். இவர ஒரு சினிமா சரித்திரம்னு கூட சொல்லலாம். ஸ்டைலுக்குன்னு ஒரு தனி அகராதி இவருதான்.

துண்ட சுழட்டுறது, கூலர்ஸை ஸ்டைலாக போடுறது, வேகமான நடை, சினிமால பார்வையாலே பேசக்கூடிய நடிப்பு திறம, கைய இடுப்புல வச்சு குடுக்க கூடிய போஸ், இது எல்லாமே இன்னவரைக்கும் அவரு சினிமால ஃபாலோ பண்ணிட்டு இருக்க கூடிய, இவருக்குனே தனித்துவமான சிக்னேச்சர்னு சொல்லலாம் . 16 வயதினிலே, முள்ளும் மலரும், தளபதி, அண்ணாமலை, முத்து, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கபாலி, ஜெயிலர் இப்படின்னு ஏகப்பட்ட படங்கள் உலக அளவுல வசூல் சாதனை பண்ணி இருக்கு. நிறைய படங்கள விட்டுட்ட அப்படின்னு சொல்லி இதை படிச்சு அவருடைய ரசிகர்கள் தயவு செய்து கோபப்படாதீங்க. என்னால எழுத முடியல, கை வலிக்குது அந்த அளவுக்கு அவருடைய படங்கள் ஏகப்பட்டது இருக்கு. இத எல்லாத்தையும் சொன்ன நா அவருடைய ஃபேமஸான டயலாக் சொல்லலனா எப்படி? “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி!”, “என் வழி தனி வழி!”, “நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்!”, “நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்.”, “பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல!”, “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்” அப்பப்பா!!! எத்தனை டயலாக்ஸ். இந்த டயலாக்ஸ் நீங்க படிக்கும்போது, அவரு படத்துல எந்த பாணியில சொன்னாரோ, அப்படியே அது உங்க மைண்ட்ல போயிருக்கும், இல்லையா? இவருடைய சினிமா வாழ்க்கையை பத்தி நிறைய சொல்லிட்டேன், அவருடைய எளிமையான வாழ்க்கைய பத்தி சொல்லவா?? திரையில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில அவரு ஒரு எளிமையான மனிதர். யார் கூடயும் ஈஸியா பழகும் அவரோட தன்மை, ஆன்மீகத்தின் மீதான அவரோட பற்று, இது எல்லாமே அவர ஒரு நடிகராக மட்டுமில்லாம, ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்கள் மனதுல நிலை நிறுத்தி இருக்காரு. என்னதான் இவர பத்தி எழுத ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், உங்களுக்கு படிக்க படிக்க சலிக்கவே இல்லனாலும், கொஞ்சம் கூட மனசு இல்லாம இந்த article ah நான் முடிக்கிறேன்.

75 ஆவது வயதுல அடி எடுத்து வைக்கும், தலைவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சினிமா துறையில நிறைய சாதனைகள் பண்ணனும் அப்படின்றது தான் நம்ம எல்லாருடைய எண்ணமுமே. நமக்கு வாழ்த்த வயதில்லை, போதுமான அளவு அனுபவமு இல்ல அப்படின்னாலும் கூட, நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுல பெருமிதம் கொள்ற. தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
சாதனைகள் தொடரட்டும்! மேலும், உம்முடைய பயணம் தமிழ் சினி துறையில் ஒளிரட்டும்!!!
Article By – RJ Sandhya

