பொதுவாக மார்கழி மாதத்தில் நாம் கொண்டாடும் விஷயங்களில் கோலமும் ஒன்று. ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் அதிகாலையில் எழுந்து தங்கள் வீட்டில் கோலம் போடும் முறை இருந்து காலம் காலமாக இருந்து வரும் முறை. சிக்கு கோலம் என்பது வெறும் கோலம் மட்டும் அல்ல அதில் இன்னும் பல ஆராய்ச்சிகள் நடக்கப்பட்டுள்ளது. இதனால் பல நன்மைகள் விளைகிறது. குறிப்பாக கணினி மற்றும் கணினி அறிவியல், கலாச்சாரம், மானுடவியல், உளவியல், ஆரோக்கியம், நவீன கால பயன்பாடு என்று பல விதங்களில் மனித வாழ்வில் பல தனிப்பட்ட முன்னேற்றதிற்கு வழிவகுக்கிறது .
சிக்கி கோலத்தின் வடிவங்கள், புள்ளிகளை இணைக்கும் கோடுகளின் சுழல்கள் (loops) மற்றும் பின்னல் அமைப்புகள் (knots) சமச்சீர் தன்மை (Symmetry) வகைப்படுத்தல் மற்றும் எண்ணுதல் போன்ற தலைப்புகளில் ஆய்வுகள் உள்ளன. கோலங்களில் பல வகையான மாவு கோலம், வண்ண கோலம்,சிக்குக் கோலம் தங்கள் வசதிக்கேற்ப தினமும் தவறாமல கோலம் இட்டு வருவது இயல்பு. இதில் சிக்கு கோலம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. அது மனித மனதை ஒழுங்குபடுத்தும் ஒரு உளவியல் பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது
இது பெண்களின் கவனத்தை (Focus) அதிகரிக்கிக்கிறது. ஏன் என்றால் சிக்குக் கோலம் இடும்போது ஒவ்வொரு புள்ளியையும் இணைக்கும் விதம் மிகவும் முக்கியம். இது மனதை ஒரே இடத்தில் நிலைநிறுததுவதல் Mindfulness & Concentration-ஐ வளர்க்கிறது.
அது மட்டுமன்றி ஒவ்வொரு மனித வாழ்வில் உள்ள பிரச்சினை தீர்க்கும் திறனை வளர்க்கிறது . சாதாரணம் ஆக நாம் நினைக்கும் கோலங்கள் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பல வகைகளில் நமக்கு பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவஆக நாம் போடும் சிக்குக் கோலத்தில் எங்கு தொடங்குவது? எங்கு வளைவது?
சமநிலை எப்படி வைத்துக்கொள்வது? என்பது அனைத்தும் இன்றைய உலகில் இன்றியமையாத Problem Solving Skills-ஐ தூண்டுகின்றன. மேலும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது
புள்ளி வடிவங்களை நினைவில் வைத்துக்கொண்டு கோலம் இடுவது: நினைவாற்றல் மற்றும் மன ஒழுங்கை வலுப்படுத்துகிறது. பார்ப்பவர் வியக்கும் அளவிற்கு அசாதாரணமாக தோன்றும் சிக்கு கோலம் மூலம் நாம் பொதுவாக கற்றுக்கொல்வது ஒரே சூழ்நிலையில் கூட பல தீர்வுகள் இருக்கலாம் என்று.
கோலம் வெறும் கோலம் மட்டும் அல்ல இதனால இயற்கையில் மனைத்ததுடைய மனம் பக்குவப்படுவதோடு creativity, Self-confidence மற்றும் அதிகாலையும் எழும் பழக்கமும் என்று பல நன்மைகள் நாம வாழ்வில் தோன்றுகிறது,
அதிகரிக்கிறது.
Article By – Rj Varsha

