Specials Stories

வள்ளுவம் போற்றுவோம்

Valluvar Special in Tamil
Valluvar Special in Tamil

உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவடைவதில்லை , தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2ம் தேதி மாட்டு பொங்கலாகவும் அதே தினத்தில் திருவள்ளுவர் தினத்தையும் நாம் கொண்டாடி வருகிறோம். உலகப் பொதுமறையை இவ்வுலகிற்கு தந்த வள்ளுவரை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் தை 2ம் நாளை நாம் திருவள்ளுவர் தினமாக பெரிதாய் கொண்டாடி வருகிறோம்.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் அதாவது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பெரும் பிரிவுகளையும் எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கிறது. இந்நூல் சாதி, மதம், மொழி என எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் மதிக்கப்பட்டு வருகிறது.

நேர்மை, அன்பு, பொறுமை, ஒழுக்கம் போன்ற மனிதநேய பண்புகளை திருக்குறள் வலியுறுத்துகிறது என்பதை உணர்ந்த பல நாடுகள் திருக்குறளை வாழ்வியல் நெறிகளுக்கு உதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.
திருவள்ளுவர் தினத்தன்று பள்ளிகள், கல்லூரிகள், இலக்கிய அமைப்புகள் மற்றும் ஊடகங்களில் திருக்குறள் வாசிப்பு, சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தப்பட்டு வள்ளுவத்தை வலிமையாக நிலைநாட்டச்செய்து வருகின்றனர். மாணவர்கள் திருவள்ளுவரின் கருத்துகளை அறிந்து, அவற்றை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க உற்சாகப்படுத்தப்படும் வருகிறது.

திருவள்ளுவர் தினம் என்பது ஒரு விழா மட்டுமல்ல; நல்ல மனிதராக வாழ்வதற்கான வழிகாட்டி கூட, திருவள்ளுவர் போதித்த நெறிகளை நாள்தோறும் கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை.

அறத்துப்பாலில்
38 அதிகாரத்தோடு
380 குறள்களும்,
பொருட்பாலில்
70 அதிகாரத்தோடு
700 குற்றங்களும்,
இன்பத்துப்பாலில்
25 அதிகாரத்தோடு
250 குற்றங்களும் எனமொத்தம்
133 அதிகாரங்களில்
1330 குறள்களில்,
2 அடியில் ஒவ்வொரு அடியிலும் 7 சீர்கள் என நம் வாழ்வியலின் சாராம்சத்தை தாங்கி நிற்கின்றது.

திருவள்ளுவரின் திருக்குறளை சமயம் சார்த்திராத நூல்களில் 40ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கில மொழியில் மட்டும் 100 எழுத்தாளர்களுக்கும் மேல் மொழிபெயர்த்துள்ளார்.
திருவள்ளுவ மாலையில் கூட வெள்ளி வியாழன் விளங்கிரவி வெண்திங்கள்..!

பொள்ளென நீக்கும் புற இருளைத்தெள்ளிய வள்ளுவர் இன் குறள் வெண்பா அகிலத்தோர் உள்ளிருள் நீக்கும் ஒளி.!

இந்த வரிகளில் புற இருளை நீக்குகின்ற ஒளி போல, மன இருளை நீக்கும் ஒளியாக திருக்குறள் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருப்பார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த திருக்குறளை அனுதினமும் போற்றி கொண்டாடுவோம்.!

Article By – RJ Kesav, Trichy