குழந்தைகள் போல வாழ்க்கையில் வண்ணம் சேர்ப்பவர்கள் வேறாரும் இல்லை. பிஞ்சு கைகளால் அவர்கள் தீட்டும் ஓவியங்களுக்கு ஒப்பாக ஏதும் உண்டோ? இவர்களை கொண்டாடவே வந்து இருக்கிறது சூர்யன் FM-ன் வர்ணஜாலம்.
சூரியன் FM-ன் வர்ணஜாலம் 12வது சீசனில் உங்களது பிள்ளையும் பங்கேற்று பரிசு வெல்ல வேண்டுமா? நவம்பர் மாதம் 30-ம் தேதி சேலம் மற்றும் வேலூரிலும், டிசம்பர் மாதம் 1-ம் தேதி சென்னையிலும் மற்றும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி கோவையிலும் வர்ணஜாலம் நடைபெறவுள்ளது.

சேலத்திலுள்ள Jairam Public School, வேலூரிலுள்ள Springdays CBSE School, சென்னையிலுள்ள Bhavan’s Rajaji Vidyashram School மற்றும் கோவையிலுள்ள Hindustan College of Science என குறிப்பிட்ட இடங்களில் நிகழ்ச்சி நடந்தேறும். 8 மணி முதல் பிள்ளைகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னையில் நடக்கவிருக்கும் வர்ணஜாலம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “செல்லப்பிராணிகள்” என்ற தலைப்பும், நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “மழைக்காலம்” என்ற தலைப்பும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “சிந்தனையை தூண்டும் ஓவியம்” என்ற தலைப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சேலத்தில் நடக்கவிருக்கும் வர்ணஜாலம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “இயற்கை” என்ற தலைப்பும், நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “உன் கனவு” என்ற தலைப்பும், எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “நெகிழி இல்லா உலகம்” என்ற தலைப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

வேலூரில் நடக்கவிருக்கும் வர்ணஜாலம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “பறவைகள்” என்ற தலைப்பும், நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “பூக்கள்” என்ற தலைப்பும், ஏழாம் வகுப்பு ஒன்பதாம் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “எழில்மிகு காட்சி” என்ற தலைப்பும், பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “தமிழகத்தின் பாரம்பிரிய சின்னங்கள்” என்ற தலைப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

போட்டியாளர்களுக்கு சார்ட் பேப்பர் நிகழ்ச்சி நடக்குமிடத்தில் வழங்கப்படும். அவர்கள் வரைவதற்கு தேவைப்படும் மீதி பொருட்களை எடுத்துவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. போட்டியின் நேரம் 60 நிமிடங்கள் ஆகும். போட்டியாளர்களின் புதுமையும், படைப்பாற்றலையும் பொறுத்தே மதிப்பீடு அமையும். பங்கேற்கவரும் போட்டியாளர்கள் அவர்களுடன் பள்ளி ID கார்டு மற்றும் பெற்றோரின் கைபேசி எண்ணை கொண்டுவரவேண்டும். 8-ம் வகுப்புக்கு கீழுள்ள பிள்ளைகளுடன் பெற்றோர் அல்லது ஆசிரியர் துணையாக வரவேண்டும். ஒவ்வொரு போட்டி வகையிலும் 3 வெற்றியாளர்கள், 2 சிறப்பு பரிசுகள் மற்றும் 10 ஆறுதல் பரிசு வழங்கப்படும். சூரியன் FM வர்ணஜாலத்திற்கு அனுமதி இலவசம். கொண்டாடுவோம் நமது பிள்ளைகளின் திறமையை!