Interview Stories

அதுல்யா-வின் அழகான முதல் தருணங்கள்

இந்த கட்டுரையானது நடிகை அதுல்யா அவர் வாழ்க்கையில் நடந்த அழகான முதல் தருணங்களை சூரியன் FM உடன் பகிர்ந்து கொண்ட உரையாடலின் தொகுப்பாகும். முழு கட்டுரையையும் படித்து மகிழுங்கள்.

நீங்கள் வாங்கிய முதல் Pay Cheque ?

நாடோடிகள் 2 படத்திற்காக தான் நான் என் முதல் Pay Cheque-ஐ வாங்கினேன்.

நீங்கள் உங்களை ஒரு கதாநாயகியாக முதன் முதலில் உணர்ந்தது எப்பொழுது?

காதல் கண் கட்டுதே படத்தை திரையில் பார்த்த பிறகு தான் நானே என்னை ஒரு கதாநாயகி என உணர்ந்தேன்.

நீங்கள் முதன் முதலில் கேமெராவை எதிர்கொண்ட தருணம்?

அதில் நான் ஒழுங்காக Perform செய்யவில்லை. என் தோழர்கள் இன்னும் அதை சொல்லி கலாய்ப்பார்கள்.

உங்களது முதல் Fan Selfie தருணம்?

ஒருமுறை ஒரு கட்டடத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் ஒரு வட இந்திய தொழிலாளி என்னிடம் வந்து Selfie எடுத்தார்.

உங்களுக்கு கிடைத்த முதல் பாராட்டு?

‘காதல் கண் கட்டுதே’ படம் பார்த்த பின் நிறைய பேர் நன்றாக நடிக்கிறேன் என்று புகழ்ந்தார்கள். முக்கியமாக அப்பா ‘ உனக்கு திறமை இருக்கிறது, உனக்கு பிடித்ததை செய்’ என்று கூறினார்.

அதுல்யா

கணக்கு Miss ஆனது 🤣

உங்களுடைய முதல் Rejection எது?

நான் 12-ஆம் வகுப்பு படிக்கும் போது என் கணக்கு வாத்தியாரை நான் Sight அடித்துக் கொண்டு இருப்பேன். அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அது தான் என் முதல் Rejection.

உங்களது முதல் Crush ?

நான் ஆறாவது படிக்கும் போது ஒரு மாணவன் மீது தான் எனக்கு முதல் Crush வந்தது.

உங்கள் பெற்றோருக்கு உங்கள் பணத்தில் நீங்கள் வாங்கி கொடுத்த முதல் அன்பளிப்பு?

நான் கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் போது இன்டர்ன்ஷிப் கிடைத்தது . அப்போது ரூபாய் 15000 சம்பளம் வாங்கினேன். அந்த பணத்தில் என் அப்பாவிற்கு சட்டை ஒன்றை வாங்கி கொடுத்தேன்.

திரையில் அமைந்த முதல் முத்தக்காட்சி?

ஜெய்யுடன் நான் நடித்த படத்தில் தான் என் முதல் முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது.

நீங்கள் உங்களை முதன் முதலில் ஒரு நட்சத்திரமாக உணர்ந்த தருணம்?

நான் என்னை பெரும்பாலும் அப்படி நினைத்துக் கொள்ள மாட்டேன். என்னோடு இருப்பவர்களே அப்படித்தான் சொல்வார்கள்.

அதுல்யா

ரசிகர்களால் முதன் முதலில் சூழப்பட்ட தருணம் பற்றி கூறுங்கள்?

நடிகர் விஷாலின் தங்கையின் கல்யாண விழாவில் நிறைய பேர் என்னை சுற்றி வளைத்து Selfie எடுத்தார்கள். அதை மறக்கவே முடியாது.

ஒரு ரசிகையாக நீங்கள் விரும்பும் நட்சத்திரங்களுடன் நீங்கள் இருந்த தருணம்?

சமுத்திரக்கனி மற்றும் சிவகார்த்திகேயனுடன் இருந்த தருணங்கள் தான்.

நீங்கள் உபயோகித்த முதல் கைபேசி?

ஒரு China மொபைல் தான் முதன் முதலில் உபயோகித்தேன்.

நீங்கள் முதன் முதலில் விரும்பிய பாடல் ?

‘சேலையில் வீடு கட்டவா’ பாடல் தான். அந்த பாடலை நான் சிறு வயதில் பாடிக்கொண்டே இருப்பேன்.

நீங்கள் முதன் முதலில் விரும்பி பார்த்த படம்?

எனக்கு விவரம் தெரிந்து நான் விரும்பி பார்த்த படம் விஜய் நடித்த ‘பிரியமானவளே’ படம் தான்.

உங்களுக்கு வந்த முதல் Proposal?

நான் பள்ளிக்கு செல்லும் போது கீழே விழுந்த என் பூவை எடுத்து வந்து ‘ இது உங்கள் பூவா?’ என்று கேட்டு Propose செய்தார் ஒருவர்.

நீங்கள் வாங்கிய முதல் சைக்கிள்?

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது தான் முதன் முதலில் சைக்கிள் வாங்கினேன். கடையிலிருந்து ஒரு 10 கிலோமீட்டருக்கு நானே அந்த சைக்கிள்-ஐ ஓட்டி வந்தேன்.

முழு Interview-ஐ கீழே கண்டு மகிழுங்கள்.

About the author

alex lew