Cinema News Stories

Soorarai Pottru – Naalu Nimisham Video

சூர்யா நடிப்பில் ரசிகர்களிடையே வேற Level பாராட்டுகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கும் சூரரை போற்று திரைப்படத்தின் “நாலு நிமிஷம்” பாடலின் வீடியோ Youtube-ல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கதைக்கேற்ப பொருந்தி மனதை விட்டு நீங்காத பாடல்களாக அமைந்துள்ளது.

மனைவியை தேடும் கணவனின் ஏக்கத்தையும், அச்சூழலின் தாக்கத்தையும் நாலு நிமிஷம் பாடலின் வரிகள் ஆழமாக உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. பாடலாசிரியர் மாயா மஹாலிங்கத்தின் வரிகள் வலியை உணர்த்தும் வரிகளாக மனதை வருடுகிறது. ஜி.வி.பிரகாஷின் மெல்லிசையும் மென்மையாக கதை நகர்வுக்கேற்ப தன்மையாக தென்றல் போல அமைந்துள்ளது.

இந்த வீடியோ Update சூர்யா ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. இப்பாடலின் விடியோவை கீழே காணுங்கள்.

About the author

alex lew