Specials Stories

All area-லையும் ஐயா “கில்லி” !!!

“நம்ம பேச்சு மட்டும் தான் silent-u ஆனா அடி சரவெடி”,அப்டினு இந்த dialogue-அ ஏதோ சும்மா படத்துக்காக சொன்ன மாதிரி தெரியல. நிஜமாவே அவரோட Character அப்படி தான். off screen-க்கும் on screen-க்கும் 1008 வித்தியாசம்.

இவரு உண்மையிலே சொல்லித்தர dance step லாம் note பன்றாரா அப்டினு mild-ஆ dance masters-க்கு doubt வந்தாலும் on-screen-ல அதுக்கு பதிலடி தர்ற மாதிரி சும்மா தாறுமாறா ஆடி மாஸ் காட்டுறதுல “மாஸ்டர்”. விஜய் எப்பவும் “topu tuckeru” தான். குறிப்பா சொல்லணும்னா இவரோட audio launch-க்கு வர்ற audience-அ விட இவரோட ultimate speech பாக்க வர்ற ரசிகர்கள் தான் அதிகம்.

எப்படா அந்த “என் நெஞ்சில் குடியிருக்கும்” dialogue-அ கேட்போம்-னு fans-க்கு waiting-லேயே வெறி ஏறும். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் கோடிக் கணக்கான ரசிகர்களை சம்பாதித்தாலும் அந்த பணிவு மட்டும் இந்த மனுஷன் கிட்ட அப்படியே தான் இருக்கு. அதனால தான் என்னவோ, இவர பெருசுல இருந்து நண்டு சிண்டு-னு எல்லாருக்கும் புடிக்குது.

இவரோட smile இருக்கே, அதுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கலாம். இவருக்கு மட்டும் எப்படி age reverse gear-ல போகுதுனு மல்லாக்க படுத்து மணிக் கணக்கா யோசிக்க வைப்பாரு. Dance, fight , Romance, Humor, sentiment-னு all area-லயும் ஐயா எப்போவும் ”கில்லி” தான். மத்தபடி எல்லா பெண்களுக்கும் “அழகிய தமிழ் மகனா” acting ல “master”-ஆ “காதலுக்கு மரியாதை” கொடுத்து ரசிகனுக்கு “நண்பனா” theatre-ல “ஒன்ஸ் மோர்” கேக்குற அளவுக்கு “மெர்சலான” acting மூலமா தமிழ் சினிமாக்கே பெருமை சேர்க்குற “தமிழன்” நம்ம தளபதி.

நம்ம தளபதி விஜய்க்கு சூரியன் FM சார்புல பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறோம்.

Article by RJ Vicky

About the author

alex lew