சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் 40 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த Update குறித்த பதிவை சன் பிக்சர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் சமீபத்தில் இயக்கிய ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் மற்றும் பாண்டிராஜ் கூட்டணி இணைந்து சூர்யாவை வைத்து இந்த சூர்யா 40 திரைப்படத்தை உருவாக்குவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா, இளவரசு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. பொதுவாக பாண்டிராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும், அந்த வகையில் சூர்யா 40 திரைப்படமும் குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முன் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2 திரைப்படத்தின் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரசிகர்களுக்கு சூர்யாவின் பிறந்த நாள் பரிசாக சூர்யா 40 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது. இந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் இருந்தேன சூர்யாவின் அன்பான ரசிகர்கள் தங்களது ஆரவாரத்தை சமூக வலைதளங்களில் தொடங்கிவிட்டனர்.
சூர்யா 40 திரைப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என தொடர்ந்து சினிமா ரசிகர்கள் விவாதித்து வந்த நிலையில், வருகிற 22-ஆம் தேதி அதற்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
- Sara Arjun New Avatar Goes Viral | Stunning Transformation Shocks Fans
- வள்ளுவம் போற்றுவோம்
- சிக்குக் கோலத்தின் பின்னால் உள்ள வாழ்வியல் நன்மைகள்
- விஜய் சேதுபதி என்னும் எதார்த்த நடிகன்
- தைத்திருநாள் வழிபாடு சிறப்புகள்
இப்படம் மாபெரும் வெற்றியடைய படக்குழுவினருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

