2013 வது வருடம் உலகின் மிக பெரிய சிகரமாக கருதப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி நம் அருணிமா சின்ஹா .
தேசிய அளவிலான கூடை பந்தாட்ட வீராங்கனையான அருணிமா, உத்திர பிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர், தாய் சுகாதாரத் துறை பணியாளர். படிக்கும்போதே படிப்பு, விளையாட்டு என இரண்டிலுமே தன் ஆர்வத்தை செலுத்தின அருணிமா தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட வீராங்கனையாக முன்னேறினார். பட்ட மேற்படிப்பை முடித்த பின் சட்டமும் படித்தார் .

கூடைப் பந்தாட்டத்தில் தான் ஒரு சரித்திரத்தை படைக்க வேண்டும் என்று பல கனவுகளோடு இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அங்கு நிகழ்ந்த கொள்ளை முயற்சியை தடுக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விடப்பட்டார். அதே சமயத்தில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ரயிலின் மீது அருணிமாவின் உடல் மோதி தூக்கி எறியப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரது ஒரு கால், அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. ஒரு கூடைப் பந்தாட்ட வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்ற கனவு, கனவான போதிலும் வீட்டில் முடங்கி கிடக்காமல் சாதிக்க துடித்தார் .
அப்போது அவர் கணவர் ஓம், உடல் உறுப்புகளை இழந்த எந்த ஒரு பெண்ணும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது இல்லை, நீ ஏன் அந்த முதல் பெண்ணாக இருக்கக் கூடாது? என்று கேட்ட கேள்வி அருணிமாவின் உள்ளத்தில் வேரூன்றியது. இதன் மூலம் உத்வேகம் பெற்ற அருணிமா, கடுமையான போரட்டத்தோடும் தன்னம்பிக்கையுடனும் உலகின் மிக பெரிய சிகரமான எவரெஸ்ட்டில் ஏறி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.
- Samantha Ruth Prabhu Latest Traditional Looks Go Viral
- பார் போற்றும் பாரதி
- லட்சாதிபதிகள் மட்டும் படிக்கவும்!
- ஐயப்பனின் பதினெட்டு படிகள் சொல்லும் பாடம்
- திரு, திருமதி பெயரில் இருக்கும் ரகசியம்
இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்று திறனாளி இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மிகப்பெரிய மலைகளில் ஏறி சாதனை படைத்தார்.
இலக்குகளை நோக்கி கடுமையாக போராடும் போது நிச்சயமாக ஒரு நாள் அது அங்கீகரிக்கபடும் என்ற வாசகத்தின் வாழும் உதாரணமாய் இருக்கும் அருணிமா சின்ஹாவிற்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்கிறது நம் சூரியன் FM .
Sharah Chidambaram ,
Suryan FM, salem .

