நடிகை கஜோல் தனது 47வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கஜோல்.
1992 ஆம் ஆண்டு பே குடி எனும் இந்தி திரைப்படம் மூலம் கஜோல் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். 1995ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படம் கஜோலின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அதன்பின் குச் குச் ஹோத்தா ஹே, தில் கியா ரே போன்ற வெற்றி படங்களில் நடித்தார் கஜோல்.
1997 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் மின்சார கனவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கஜோல். இப்படத்தில் இவர் ஏற்று நடித்த பிரியா அமல்ராஜ் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் காலத்தால் அழியாத அழகிய கதாபாத்திரமாக நிலைத்து நிற்கிறது. இப்படம் தமிழில் மட்டும் இன்றி ஹிந்தியிலும் வெளியிடப்பட்டது. இப்படம் கஜோலின் ரசிகர் பட்டாளத்தை நினைவில் கொண்டு ஹிந்தியிலும் படமாக்கப்பட்டது.

குறிப்பாக இப்படத்தில் வரும் “வெண்ணிலவே வெண்ணிலவே”பாடலில் பிரபுதேவாவுடன் கஜோல் ஆகியிருக்கும் நடனம் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்திருந்தாலும், கோலிவுட் வட்டாரத்தில் கஜோலுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.
பல வெற்றி படங்களில் நடித்த கஜோல் 90களின் கனவுக்கன்னியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் கஜோல் வசுந்தரா பரமேஷ்வர் எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தன் திரையுலக வாழ்க்கையில் பல விருதுகளை கஜோல் பெற்றுள்ளார். அந்த வகையில் பாலிவுட் திரைப்பட விருதுகளில் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான விருதை கஜோல் வென்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு வெளிவந்த குச் குச் ஹோத்தா ஹை திரைப்படத்திற்காகவும், 2002 ஆம் ஆண்டு வெளிவந்த கபி குஷி கபி கம் திரைப்படத்திற்காகவும் பாலிவுட் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது கஜோலுக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 2002 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் கஜோலுக்கு ராஜீவ் காந்தி விருது வழங்கி கௌரவித்தது. 2008 ஆம் ஆண்டு கரம்வீர் புரஸ்கார் விருதும் இந்திய அரசால் கஜோலுக்கு வழங்கப்பட்டது.
- Samyuktha Viswanathan Fan Favorite Photos Collection
- Ashika Ranganath Dazzles in Her Latest Viral Glamorous Photos Inside
- Soundariya Nanjundan Wins Hearts with Her Mesmerizing New Photos – Viral Clicks
- Kayadu Lohar Adorable Expressions Go Viral – Trending Photos Inside
- Vedhika Stunning Photos Go Viral on Social Media – Latest Trending Clicks
கஜோலின் கலை பணியை பாராட்டும் விதத்தில் 2011 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவருக்கு கலைத்துறையில் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது. இந்த ஆண்டு வெளிவந்த தன்ஹாஜி எனும் இந்தி திரைப்படம் தான் கஜோல் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம்.
கஜோலின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகை கஜோலுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.