நாங்க வேற மாறி வேற மாறி அப்படின்னு இன்னைக்கி வலிமை படத்துக்கான Update-க்காக காத்து இருந்த தல ரசிகர்கள் எல்லாம் துள்ளி குதிச்சு ஆட்டம் போட்டுட்டு இருக்காங்கனா இவரோட வரிகள்ல ரிலீஸான பாட்டு தான் காரணம். நிஜமாவே இவர் வேற மாதிரி தான்.
ஆரம்ப காலத்துல கேமியோ ரோல், அசிஸ்டண்ட் டைரக்டர் அப்படின்னு இவரோட career start பண்ணாரு. திடீர்னு 2012 தீபாவளி பட ரேஸ்ல தளபதி நடித்த துப்பாக்கி படத்தோட இவர் சிம்புவை வைத்து இயக்குன போடா போடி படமும் களம் இறங்குச்சு

ரொம்ப நாள் என்னடா இவரு ஆள காணோம் அப்படின்னு யோசிச்சா வேலையில்லா பட்டதாரில கேமியோ ரோல் வந்தாரு. அப்புறமா எனக்கு இப்போ வேலை வந்துருச்சு சாதாரண வேலை இல்லை ரவுடி வேலை அப்படின்னு நம்ம விஜய் சேதுபதியை வச்சு நானும் ரவுடி தான் படத்தை Direct பண்ணாரு. ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா அப்படின்னு நம்ம நயன்தாராவுக்கு பாட்டு இருக்கு, ஆனா நம்ம நயன்தாராவே இவரோட Work-ஐ பார்த்து வியந்து போயிருக்காங்க.
எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும் அப்படின்னு அவருக்கு ஏத்த மாதிரி பாட்டு எழுதினார்.. தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே அப்படின்னு அவரு அனுபவிச்சு, எனக்கு நீ ஈசியா எல்லாம் வேணாம் பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நானா அப்படின்னு லவ் பாடல்கள் எல்லாத்தையும் லவ் பண்ணி எழுதுவாரு.

இவர் கூட நம்ம சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் அண்ணே அப்படின்னு நட்சத்திர பட்டாளமே ஒரு கூட்டம் சேர்ந்தது..இது தேடி சேர்த்த கூட்டம் இல்ல 2018 ல ‘ தானா சேர்ந்த கூட்டம்’…
இன்னைக்கி நிறைய தங்கச்சிங்க அவங்க அண்ணனுக்காக Dedicate பண்ற பாட்டு “எங்க அண்ணே அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்” அப்படிங்கிற இந்தப் பாடல் வரிகளுக்கான சொந்தக்கார அண்ணன் இவர்தான்.
லவ் பண்ணா வுட்றனும் அப்படின்னு பாவ கதைகள்ல சொன்னது இவர்தான். இப்போ காத்துவாக்குல ரெண்டு காதலை இயக்கிட்டு வர்றதும் இவர்தான்…தன்னோட நெற்றிக்கண்ணைத் திறந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்..
கேமியோ ரோல், இயக்குனர், இப்போ தயாரிப்பாளர், பாடலாசிரியர்-னு பல பரிமானங்கள் எடுத்துள்ள இவரு நிஜமாகவே வேற மாதிரிதான்…
HAPPY BIRTHDAY VIGNESH SHIVAN
-Article by RJ Surya