நடிகர் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக் கழகம். இந்த செய்தியை சிம்பு ரசிகர்கள் இணையத்தில் உற்சாகத்துடன் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
குறிப்பிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில் நடிகர் டி.ராஜேந்திரனின் மகன் சிம்பு திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார். அதிலும் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழில் அட்டகாசமாக நடனமாடக் கூடிய வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர்.

நடிகர் வடிவேலு எப்படி திரையில் வராமலிருந்த காலங்களிலும் சமூகவலைத்தளங்களில் Meme-கள் மூலமாக மக்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தாரோ, அது போலவே சிம்புவும் அவரது ரசிகர்களால் திரையில் வராத காலங்களிலும் கொண்டாடப்பட்டு வந்தார். அந்த சமயத்தில் அவ்வப்போது வெளிவரும் அவரது புகைப்படங்களே அவரது ரசிகர்களுக்கு Update ஆனது. அதையே ஒரு புதிய திரைப்படத்தின் Update-ஐ போல கொண்டாடினர்.
செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் உத்வேகத்துடன் நடித்து வந்த சிம்பு, உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் மாஸ் Entry கொடுத்தார். இதையடுத்து சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு மிகப்பெரிய Box Office ஹிட்டாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் சற்றே தாமதமானாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் வெகுவாக கொண்டாடப்பட்டது. தியேட்டர்கள் Housefull ஆனது.
இந்நிலையில் அடுத்ததாக சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் தான் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில், சிம்பு தமிழ் சினிமாவிற்கு இத்தனை வருடங்கள் அளித்துள்ள பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கவுரவ டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது. மேடையில் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியதை ஆனந்த கண்ணீருடன் அவரது பெற்றோர் பார்த்து ரசித்தனர்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், விஜயகாந்த், விக்ரம், விஜய் ஆகிய நடிகர்கள் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Poornima Ravi Shines in Yellow Movie Promotions | Latest Stunning Photos 2025
- Happy Birthday Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
- Divya Bharathi Serves Looks, Grace & Glow | Stunning Photos Go Viral
- புண்ணியம் தரும் புரட்டாசி!
- பூஜையில் மணி அடிப்பது ஏன் ?
கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஆத்மன் சிலம்பரசன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

