தீயா வேலை செய்யணும் குமாருன்றது இவரோட படத்தின் தலைப்பு மட்டும் இல்லைங்க இவரோட Principal Of Life னும் சொல்லலாம்.
ஏன்னா அவரு தீயா வேலை செஞ்சதால தான் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாம இப்போ முன்னணி இயக்குநரா வந்திருக்காரு. நம்ம எல்லாரோட Favourite Director சுந்தர் சி. கஷ்டமான நேரத்துலையும் இஷ்டப்பட்டு வேல செய்ததால தான் எல்லாமே “கலகலப்பா” வந்ததுனே சொல்லலாம்.
சுந்தர் சி அவர்கள் சினிமாக்கு வரதுக்கு முன்ன அவரும் அவரோடு நண்பரும், குஷ்பு நடித்த படத்திற்கு முதல் முறையா போனப்போ நண்பர் கிட்ட சுந்தர் சி சொன்ன ஒரு விஷயம், கல்யாணம் பண்ண குஷ்வூ மாதிரி ஒரு பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்.

அப்டியே சில வருஷம் Forward பண்ணி பார்த்தா சுந்தர் சி அவர் நண்பன், குஷ்பு சேர்ந்து அவரு இயக்கிய “அருணாச்சலம்” படம் பார்க்க போனார்களாம். அட அட கேட்கவே எவ்ளோ அழகா இருக்கு, ஒரு பெரிய படத்தை இயக்கனுங்கிற கனவு நிஜமாகும் போது தன்னுடைய பல வருட நண்பரும் தன்னுடைய காதல் மனைவி குஷ்புவும் அருகில் இருந்த தருணம் அவருடைய வாழ்க்கைல மறக்க முடியாத தருணம்னு அவரே சொல்லிருக்காரு.
இதற்கு இடைப்பட்ட வருடம் தான் இவர் உழைப்பிற்கான சான்று. மக்கள் எப்பவுமே “கலகலப்பா” ஜாலியாக இருக்கணும் எல்லா கவலையும் மறந்துட்டு தியேட்டர்க்கு வரும்போது நல்லா சிரிச்சிட்டு வெளியில் வரணும்ன்றதுக்காகவே பெரும்பாலும் காமெடி படமாவே எடுக்கணும்னு நினைக்கறவர். கொஞ்சம் மாறுபட்டு எடுத்த படம்தான் “அன்பே சிவம்” அது இன்னைக்கும் IMDB ரேட்டிங் 8.4ல இருக்கு.

ஆரம்பத்துல இருந்தே கேமியோ Appearance குடுத்துட்டு இருந்த இவரு, தலைநகரம்ல கதாநாயகனா அறிமுகம் ஆனாரு. என்னதான் இவரு Busy ஆனா நடிகரா இயக்குநரா இருந்தாலும் எப்பவுமே குடும்பத்துக்கு முதல் பிரியரிட்டி குடுத்து கரெக்ட்டா படங்களுக்கு நடுல பிரேக் எடுத்து குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ணுவாரு.
இன்னைக்கும் நிறைய பேருக்கு “Couple Goals” செட் பண்ணிட்ருக்காரு. இந்த சந்தோஷமமும் இன்னும் நிறைய வெற்றியும் அவரோட வாழ்க்கைல நிறைந்து இருக்கட்டுமென மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது சூரியன் FM.