குடும்பங்கள் கொண்டாடும் படம் இல்ல… ஆனா, கடைக்குட்டி சிங்கம் குடும்பங்களை கொண்டாடுற படமா இருந்துச்சு.
ஜூலை 13, 2018 வெளியான இந்த படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு ! படத்தின் கதாநாயகன் கார்த்தி கதாநாயகி சாயிஷானு சொல்லுறத விட குடும்பங்களோட முக்கியத்துவம் தான் அங்க கதாநாயகன், கதாநாயகி எல்லாமே. கல்யாண அழைப்பிதழ்ல கெத்தா ரொம்பவே பெருமையா பேருக்கு பின்னாடி விவசாயினு போடுற பழக்கம் இந்த படத்தை பார்த்ததுக்கு அப்பறமா நெறய பேருக்கு வந்துச்சு!

பல வருஷ சண்டை எல்லாம் இந்த படத்தை பாத்ததும் முடிவுக்கு வந்திருக்கு… ஆமாங்க பல குடும்பங்கள் சேர்ந்திருக்கு… இயக்குநர் பாண்டிராஜ் படங்கள் பொதுவா கிராம மக்களுக்கு புடிக்கும். ஆனா இந்த படம் கிராமங்கள் கொண்டாடுற படமா அமைஞ்சுது தனி சிறப்பு.
சில படங்கள்-ல நெறய கேரக்டர் இருந்தா யாருமே தெரியமாட்டாங்க. ஆனா இந்த படத்துல ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசக்கூடிய சின்ன சின்ன வரிகள் கூட நம்ம மனசுல அப்டியே நிக்கும்! அப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உயிர் கொடுத்திருந்தாங்க. விவசாயத்தை காப்பாத்தணும் காப்பாத்தணும்னு வார்த்தைல சொல்லாம டெக்னாலஜி மூலமா என்ன பண்ணலாம்னு ஒரு ஐடியாவும் சொல்லிருந்தாங்க!

இது 5 வருஷம் இல்ல இன்னும் எத்தன வர்ஷம் ஆனாலும் குடும்பங்கள் கொண்டாடுற படமா தான் இருக்கும்! யாராவது படத்த இன்னும் பாக்காம இருந்திங்கனா குடும்பத்தோட உக்காந்து பாருங்க.