Cinema News Specials Stories

Vibe குழுவின் தலைவர் விஜய் ஆண்டனி!

Vijay-Antony

இன்னைக்கு நாம பலரும் Vibe-ன்ற வார்த்தைய பரவலா உபயோகிச்சிட்டு வரோம், இந்த வார்த்தை முக்கியமா இசை ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டதானு தெரியல. இப்பலாம் எந்த ஒரு பாடல் வந்தாலும் கேட்ட உடனே ஒரே “Vibe”-ஆ இருக்குனு தான் சொல்லுவோம்.

இந்த Vibe-ன்ற வார்த்தைய கேட்டா பலருக்கும் முதல்ல நியாபகம் ஒரு முகம் விஜய் ஆண்டனி, முதல்ல கேக்குற பாடல் விஜய் ஆண்டனி பாட்டா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்கள் எப்பவும் திறமையாளர்களை கொண்டாட தவறினதே இல்ல, அப்படி 2005-வது வருஷம் “சுக்ரன்” படம் மூலமா தமிழ் சினிமால தடம் பதிச்ச விஜய் ஆண்டனிய இன்னைக்கு இசையமைப்பாளரா, பாடலாசிரியரா, நடிகரா, தயாரிப்பாளரா நாம கொண்டாடிட்டு இருக்கோம்.

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கும். அப்பிடி விஜய் ஆண்டனி பாடல்களுக்கு Visiting Card-ஆ இருக்குறது, “டனர் தனரு சட்டா டமில் தைடு சைடு போய்டு வைடு யக்கா சக்கா “ என்னனு புரியலல… மெட்டுக்கு வரி எழுதாமா விஜய் ஆண்டனி அவர் பாட்டுக்கு எழுதின அர்தமில்லா வரிகள் தான் மக்கள்கிட்ட விஜய் ஆண்டனிக்கு அட்டகாசமான அடையாளத்த கொடுத்துச்சு.

ஆரம்ப காலத்துல விஜய் ஆண்டனிக்கு கிடைச்ச பட்ஜெட்ல தன்னோட பாடல்களுக்கு பெரிய பாடகர்களையோ, Live Music வாசிக்குற கலைஞர்களையோ அழைக்க முடியல. ஆனா பாட்ட ஹிட் ஆக்கனும்னு அவர் எடுத்த அந்த முடிவு தான் அர்த்தமில்லா வரிகள்.

எடுத்துக்காட்டுக்கு :

லேது லத்துன லேது லத்துன,

டைலாமோ,

நாக்க முக்கா,

உசுமலாரசே,

சம்பலபலசிப்டே,

உத்தமனுக்குனற எசரே எப்ற,

சில்லாக்ஸ் சில்லாக்ஸ்,

மக்காயாலா மக்காயாலா…

இப்படி சொல்லிட்டே போலாம். இதுல உங்க Favorite வரி என்னனு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.

காதலில் விழுந்தேன் படத்துல வந்த நாக்க முக்கா பாட்டு விஜய் ஆண்டனிக்கு Pan World அறிமுகம் தந்துச்சுனு சொல்லாம். 2011-ல World Cup மேட்ச் நடந்த எல்லா Stadium-லயும் நாக்க முக்கா தான் ஆடியன்ஸ், பிளேயர்ஸ்னு எல்லாரையும் Vibe ஆக்குச்சு. 2009-ல Cannes Gold Lion Award வாங்கின முதல் இந்திய இசையமைப்பாளர் அப்படிங்குற பெருமையையும் “நாக்க முக்கா” விஜய் ஆண்டனிக்கு பரிசா தந்துச்சு.

தன்னோட பாடல்களால பல இளைஞர்கள கவர்ந்த விஜய் ஆண்டனி, மற்ற இசையமைப்பாளர்களோட இசைலையும் பாடியிருக்காரு. அப்படி யுவன் சங்கர் ராஜோவோட 100வது படமான “பிரியாணி”ல எதிர்த்து நில் பாடல ஜிவி, இமான், தமன், விஜய் ஆண்டனி, யுவன் எல்லாரும் சேர்ந்து பாடினாங்க.

ஆனா விஜய் ஆண்டனியோட Portion-க்கு மட்டும் பயங்கர வரவேற்பு, யூடியூப் கமெண்ட்ஸ் முழுக்க விஜய் ஆண்டனி ரசிகர்களோட கமெண்ட்ஸ் மட்டும் தான், இப்ப கூட நீங்க ஒரு விஜய் ஆண்டனி Vibe குழு மெம்பர்னா அந்த பாட்டுல போய் ஒரு கமெண்ட் போட்டுட்டு வாங்க.

இப்படி முன்னணி நடிகர்களுக்கு இசையமைச்சு, பாடல் பாடி, வரிகள் எழுதின விஜய் ஆண்டனி தன்னோட சொந்த தயாரிப்புல நடிகராகவும் அறிமுகமான படம் தான் 2012-ல வெளியான “நான்”. ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்ப பெற்ற “நான்” படத்துல பாடல்களும் வேற லெவல் ஹிட்டு, படமும் வேற லெவல் ஹிட்டு. அடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்னு வரிசையா விஜய் ஆண்டனி படங்கள் வெளியாச்சு.

இதுல பிச்சைக்காரன் படம் எதிர்பாராத அளவுக்கு தமிழ் ரசிகர்களை மட்டுமில்லாம தெலுங்கு சினிமா ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடி வசூல் சாதனை பண்ணுச்சு. அதுக்கப்புறம் சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன்னு நெகடிவ் டைடில்ஸோட படங்கள் நடிச்சாரு, ஒரு சில படங்களுக்கு சரியான வரவேற்பு இல்லைனாலும் விஜய் ஆண்டனியோட நடிப்பு படத்துக்கு படம் வித்தியாசமா அமைஞ்சுது.

சமீபத்துல வெளியான கோடியில் ஒருவன், தமிழரசன், விஜய் ஆண்டனியோட இயக்கத்துல வந்த பிச்சைக்காரன் 2 போன்ற படங்கள் ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்ப பெற்றுச்சு. தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய் ஆண்டனிய நல்ல இசையமைப்பாளரா, நடிகரா, தயாரிப்பாளரா, எடிட்டரா, டைரக்டரா ரசிச்ச மாதிரி, இவரு யதார்த்தமா பேசுற இன்டர்வியூக்கும் பெரிய ரசிகர்களா மாறிட்டாங்க.

பன்முக திறமை கொண்ட நம்ம விஜய் ஆண்டனி இன்னும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள், பாடல்கள் தந்து மேலும் பல உயரங்கள் அடைய சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Articel BY RJ SRINI