Cinema News Stories

அறிவிக்கப்பட்ட தேதியில் வெளிவராது… சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ தாமதத்திற்கு காரணம் என்ன?!

சீயான் விக்ரம் இயக்குனர், பா.ரஞ்சித் முதல்முறையாக இணைந்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் Post Production வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1870 முதல் 1940 ஆம் வருடத்தின் பாதி வரை கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘தங்கலான்’ படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ‘Lara Croft Tomb Raider: The Cradle of Life’ மற்றும் ‘The Pianist’ போன்ற படங்களில் நடித்த ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

2024 பொங்கலுக்கு ‘தங்கலான்’ படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் சில காட்சிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் திருப்தி அடையாததால் அந்த காட்சிகளை திரும்ப படம்பிடித்துள்ளார், இதனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கான நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை ஜனவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினர்.

ஆனால் சமீபத்திய தகவலின் படி படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் சீயான் விக்ரம் படத்திற்கான டப்பிங்கைத் தொடங்கியுள்ளார், டப்பிங் Studio-வில் தங்கலான் குழுவினருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார் சீயான் விக்ரம்.

Article By Sathishkumar Manogaran