Specials Stories

வரிக்குதிரைகள் பத்தின இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

வரிக்குதிரை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒருவகையான விலங்கு. இது குதிரை இனத்தை சேர்ந்தது. தாவர உண்ணி. உடல் முழுவதும் கருப்பு வெள்ளை வரிகள் இருப்பதால் வரிக்குதிரை என்று சொல்லப்படுகிறது. வரிக்குதிரை ஒரு சமூக விலங்கு. இவைகள் கூட்டமாகவே வாழும். எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். வரிக்குதிரை நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது. நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 – 2 மீட்டர் உயரமும் 2 – 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்கும்.

காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழும். அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள்வரை உயிர் வாழும். வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் ஒன்று போல மற்றொன்று இருக்காது. வரிகள் முன்புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.

மனிதர்கள் கைவிரல் இரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித்தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டது. ஆப்பிரிக்காவின் அனைத்து மேய்ச்சல் விலங்குகளிலும் வரிக்குதிரை மிகவும் பிரபலமானது. அவை பொதுவாக நமீபியா, அங்கோலா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைப்பகுதிகளைத் தவிர கென்யா மற்றும் எத்தியோப்பியாவின் அரை பாலைவனப்பகுதிகளில் காணப்படுகின்றன.

பொதுவாக வரிக்குதிரைகள் 400 முதல் 850 பவுண்டுகள் எடை இருக்கும். மலை வரிக்குதிரைகளுடன் வெவ்வேறு வகையான வரிக்குதிரைகள் உள்ளன. வரிக்குதிரைகள் ஒரு ஜிக்-ஜாக் முறையைப் பின்பற்றி ஓடக் கூடியவை. வரிக்குதிரைகளின் கூட்டத்தை ஜீல் என அழைப்பார்கள். வரிக்குதிரைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 ம் தேதி வரிக்குதிரை தினம் கொண்டாடப்படுகிறது.

Article By RJ Vallimanavalan