Cinema News Stories

தமிழகத்தின் இதயத்தில் பிறந்து தமிழ் சினிமா ரசிகர்கள் இதயத் குடியிருக்கும் ‘கவின்’

தமிழ் சினிமால பத்து வருஷத்துக்கு முன்னாடி உனக்கு பிடிச்ச நடிகர் யாருனு ,யார்கிட்ட கேட்டாலும் முன்னணி நடிகர்கள் பெயர் தான் அதிகமா சொல்லுவாங்க. அதுவே இப்ப இருக்க ரசிகர்கள்  கிட்ட கேட்டா வளர்ந்து வரும் நடிகர்கள் பலரோட பெயர சொல்லுங்க. ஏன்னா இங்க ரசிகர்களோட ரசனை மாறியாச்சு மாஸ் மசாலா படங்களை விட நல்ல கதையோட வர படங்களை கொண்டாடுறாங்க. 

அப்படி இந்த தலைமுறை ரசிகர்களுக்கான  STAR கவின். நமக்கு வைக்குற பெயருக்கான அர்த்தம் ஆயிரம் இருக்கும், ஆனா சிலருக்கு அந்த பெயர் அவங்க வாழ்க்கைல என்ன ஆவாங்கனு சொல்லும், அப்படி பெயர்லையே வெற்றி கொண்டவர் தான் KAV(W)IN. அந்த வெற்றி சாதாரணமா கிடைக்காது சினிமாத்துறைல. 

இப்ப எடுத்துகாட்டுக்கு சினிமாத்துறைய ஒரு பெரிய பில்டிங்னு வச்சுக்குவோம் சிலர் அதுல லிப்ட் ஏறி நேரா ஹீரோ, ஹீரோயின், காமெடியன்னு ஆகிடுவாங்க. ஆனா நம்ம கவின் திருச்சிலருந்து சென்னை போய் அங்க, அந்த பில்டிங்ல தான் நாம வாழ்க்கைய தேட போறோம் ஒரு குறிக்கோள் வச்ச ஓட போறாம்னு அந்த இடத்தோட கிரவுண்ட் floor போறாதுக்கே பல கஷ்டங்களை தாண்டினாரு.

மொத படிய தனியார் தொலைக்காட்சில ஒரு காலேஜ் சப்ஜெக்ட் மூலமா நடிச்சு ஏறினாரு.அதுல கிடைச்ச பெயர் மொத ப்ளோர்க்கு அவர கூட்டிட்டு போச்சு, அடுத்து பீட்சா படத்துல ஒரு சின்ன கதாபாத்திரமா வந்தாரு. அதை தொடர்ந்து சின்ன சின்ன ரோல்கள் கிடைச்சாலும்  அதே தனியார் தொலைக்காட்சில ஒரு புகழ்பெற்ற சீரியல்ல வில்லனா நடிச்சு ஹீரோவா மக்கள் மனசுல இடம் பிடிச்சாரு கவின், இவேராட சொந்த பெயர மறந்து எல்லாரும் வேட்டையன் வேட்டையன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.

இப்படி தமிழ் சினிமான்ற பில்டிங்ல கவின் ஒவ்வொரு படிகட்டா ஏறி ஏறி மேல வர, மறுபக்கம் லிப்டல பலர் சுலபமா ஏறி னாங்க, நடிச்சாங்க, ஏறின வேகத்துக்கே ஏறங்கினாங்க, ஆனா கவின் தன்னோட சொந்த கால்களால ஒவ்வொரு படிக்கட்டு ஏற ஏற 2017ல சத்திரயன் படத்துல ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைச்சது.அதை சரியா பயன்படுத்தி 2019 நட்புனா என்னனு தெரியுமான்ற படம் மூலமா தமிழ் சினிமால ஹீரோவா அறிமுகம் ஆனாரு , படம் எதிர்பார்த்த வெற்றி தரலனாலும், அடுத்தடுத்து வெற்றிப்படியில நடக்காம ஓடானாரு.

அதே தனியார் தொலைக்காட்சில மறுபடியும் ஒரு பிரபலமான நிகழ்ச்சில கலந்துகிட்டாரு 100 நாள் ஒரே வீட்டுல இருக்கணும்னு வந்தாரு, ஆனா அந்த வீடு மூலமா மீண்டும் தமிழ் மக்கள் வீட்டுக்குள்ள நுழைஞ்சாரு. அதை தொடர்ந்து வெற்றிப்படியில ஓடிட்டு இருந்த கவினுக்காக 2021லிப்ட் வந்துச்சு, இத்தனை நாள் செல்வந்தர்களுக்காக நின்ன அந்த லிப்ட் இந்த முறை உண்மையான உழைப்ப போட்ட ஒருத்தருக்கு நின்னுச்சு கவின் ஏறின அந்த லிப்ட் நேரா TOP FLOOR போகல ஒரு Floor-ரா கூட்டிட்டு போச்சு, அப்படி அடுத்த கட்டத்துக்கு போன கவின் 2022 ஆகாஷ் வாணினு ஒரு வெப் சீரீஸ் பண்ணாரு. 

லிப்ட்,ஆகாஷ் வாணி எல்லாமே OTT ரிலீஸ், ஆன்லைன் ரசிகர்களுக்கு ஓகே! ஆனா கவினுக்காக ஆண் லைன் பெண் லைன்னு தியேட்டர் வந்து லைன்ல காத்திருந்து ரசிகர்கள் பார்த்து கொண்டின ஒரு படம் 2023ல ரிலீஸ் ஆன “டாடா” பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவிக்க, ஒட்டுமொத்த தியேட்டர் ஓனர்களை சந்தோஷமாக்கின Blockbuster படமா கவினுக்கு டாடா அமைஞ்சது. இந்த வெற்றிக்காக தான் காத்திருந்தாரு கவின், திருச்சி பையனுக்கு திருப்புமுனையா அமைஞ்சது டாடா. 

அந்த வெற்றிக்கு அப்பறம் தமிழ் சினிமாவோட எதிர்காலம்னு ரசிகர்கள் சொல்லும் STAR-ராக உருவானாரு கவின். தன்னோட சொந்த உழைப்பால STAR ரா உருவான கவின் நடிப்புல 2024ல STAR Trailer வெளி வருது, அதை பார்த்து பிரம்மிச்ச ரசிகர்கள் தியேட்டர்ல Housefullனு Board போடுற அளவு தியேட்டர்ல STAR படத்த கொண்டாடினாங்க. அடுத்து தன்னோட குரு நெல்சன் தயாரிப்புல Beggar படத்துல நடிக்குற கவினுக்கு அதுவும் ஒரு வெற்றிப்படமா அமையும். 

நடிகர் மட்டுமில்ல VJ,Assistant Director, Script Writerனு பல அவதாரங்கள் கொண்ட கவின் தமிழ் சினிமால முன்னணி கதாநாயகனா அவதாரம் எடுக்க சூரியன் FMன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Article By RJ SRINI

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.