Cinema News Specials Stories

Karthi – The Complete Actor

Karthi

Karthi, ‘The complete actor’ அப்படின்னு சொன்னா அது மிகை இல்லை.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. எப்பொழுதுமே ஒரு நடிகரின் குடும்பத்திலிருந்து நடிகர்கள் உருவாகினால் அந்த நடிகரின் திறமையோடு Compare செய்வது நம் தமிழர்களின் தொன்றுதொட்ட வழக்கம்..!

வீட்டில் ஒன்றுக்கு இரண்டு அட்டகாசமான நடிகர்கள் இருந்தும் கூட யாருடைய பாதிப்பும் இல்லாமல் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் கார்த்திக். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை அப்படியே திரையில் பிரதிபலிப்பதில் வல்லவர்.

இந்த 15 வருடத்தில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நடிகர் கார்த்தி தன்னுடன் ஏற்கனவே பணியாற்றிய இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்தது இல்லை. தற்போது தான் இயக்குனர் மணிரத்னம் (பொன்னியின் செல்வன்) மற்றும் இயக்குனர் முத்தையா (விருமன்) ஆகியோருடன் மீண்டும் பணியாற்றி வருகிறார்.

ஆயுத எழுத்து திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். எப்பொழுது அவருக்கு சினிமா பிடித்துப்போனது என தெரியவில்லை. ஆனால், அவர் நடிக்கத் துவங்கிய பின் சினிமா ரசிகர்களுக்கு அவரை பிடித்து போனது.

வெளிநாட்டில் படித்துவிட்டு பணியாற்றி வந்த கார்த்தி பருத்திவீரனாக மாறியது எல்லோருக்கும் ஆச்சரியம். கிராமத்து கதாபாத்திரத்தை அவ்வளவு இயல்பாக எந்த ஒரு நடிகரும் இதுவரை நடித்தது இல்லை என்றே பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இருந்தபோதும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், நடிகர் கார்த்தியின் மற்றொரு பரிமாணத்தை நமக்கு காட்டியது.

அதன் பிறகு அதே போன்றுள்ள கதாபாத்திரங்களில் தொடராமல் ‘பையா’ திரைப்படத்தில் ஒரு Handsome ஹீரோவாக வந்திருந்தார், ‘நான் மகான் அல்ல’ படத்தில் Boy next door கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார், ‘சிறுத்தை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களில் கம்பீரமான காவல் அதிகாரியாக மிரட்டியிருப்பார்.

‘கைதி’ திரைப்படத்தில் ஒரு ஆயுள் தண்டனை கைதியாகவும், தன் மகளைப் பார்க்க எங்கும் ஒரு தந்தையாகவும் நடித்து நம்மை நெகிழ்த்தியிருப்பார். இவரது பயணத்தில் சில தோல்வி படங்களும் உண்டு, விழாமல் செல்வதில்லை வெற்றி, விழுந்தாலும் எழுவது தான் வெற்றி என்று பலமுறை நடிகர் கார்த்தி நமக்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறார்.

விவசாயம் குறித்து படங்களில் மட்டும் கருத்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் ‘உழவன் Foundation’ என்று ஒரு அமைப்பு துவங்கி போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்கிறார். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வள்ளுவர் உரைத்திருக்கிறார். ஆனால் உழவர் மகிழ்வோடு உண்டு வாழ தன் உழவன் Foundation மூலம் வழிவகை செய்யும் நடிகர் கார்த்திக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article by Roopan Kanna

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.