Interview Stories

அதிதி ராவ் Exclusive Interview

இந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் நடிகை அதிதி ராவ் அவர்களின் நேர்காணலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது.

அதிதி கதைகளை எப்படி தேர்வு செய்வார்?

நான் கதைகளை கேட்கும் போது அதை கற்பனையில் படமாக்கி அந்த கதாபாத்திரத்தில் என்னை வைத்துப் பார்ப்பேன். அது சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த கதையை தேர்வு செய்வேன்.

சைக்கோ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

பொதுவாக மிஷ்கின் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.

நான் எப்போதுமே ஒரு காட்சியை நடித்து முடித்தவுடன் அதை நன்றாக செய்துள்ளோம் என்ற சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பேன். ஆனால் இந்த படத்தில் அப்படி நான் செய்யவில்லை. ஒவ்வொரு காட்சியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து நடித்தேன்.

எந்த காட்சி உங்களுக்கு சவாலாக அமைந்தது?

இயக்குனர் மிஷ்கினிடம் அனைவரும் பாதுகாப்பாகவே உணர்வார்கள். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் காட்சிகளை படமாக்கும் போது அவர் அனைவருக்கும் கடினமான சவால்களை கொடுப்பார்.

அவர் இயக்கத்தில் நடிப்பது கஷ்டம் தான் ஆனால் எனக்கு சவால்களை ஏற்று நிறைவேற்றுவது மிகவும் பிடிக்கும்.

உதயநிதியுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

அவர் மிகவும் நல்ல உள்ளம் கொண்ட நடிகர். எப்போதுமே படப்பிடிப்பு தளத்திலேயே இருப்பார். அவருடன் நடித்துள்ள மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

“மிஷ்கின் எனது Frame-ஐ பார்த்து ச்சீ என்று கூறினார் ” – அதிதி ராவ் கூறிய பல சுவாரஸ்யமான தகவல்களை கீழுள்ள வீடியோவில் கண்டு மகிழுங்கள்.

About the author

alex lew