AK 64: அஜித் குமாரின் அடுத்த படத்தின் செம அப்டேட்.. இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோயின் லிஸ்ட் இதோ!. தற்போது குட் பேட் அகிலி படத்திற்கு பின் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இன்னமும் அதிகாரபூர்வமாக படக்குழு சார்பில் வெளியாகவில்லை. இந்த தகவல்கள் கோலிவுட் வட்டரத்தில் பேசப்பட்டு வரும் தகவல்கள் ஆகும்.
அஜித் குமார்
அஜித் குமார் – தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் பிரபலம் ஆவார். இவர் நடிகர், கார் ரேஸர் போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்டவர். சினிமாவை கடந்து தற்போது வெளிநாடுகளில் கார் ரேஸிங் பந்தயத்தில் பங்குபெற்று வருகிறார், அஜித் குமார். தற்போது இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி – ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனராக அஜித் குமார், த்ரிஷா கிருஷ்ணன் என பல தமிழ் சினிமா பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி 2025-ம் ஆண்டு வெளியாகியுள்ள ப்ளாக்பஸ்டர் திரைப்படம். இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி என்னும் தோல்வி படத்தினை தொடர்ந்து வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டுள்ளது.

AK 64
தற்போது அஜித் குமாரின் புதிய படமான ‘AK 64’ திரைப்படத்தின் அறிவிப்புகள் கசிந்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குட் பேட் அகிலி திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்குமாரின் புதிய படத்திற்கும் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த கூட்டணி பற்றிய அறிவிப்பு குட் பேட் அகிலி திரைப்பட இறுதி காட்சியில் அஜித்தின் கார் நம்பர் பிளேட்-ல் குறிப்பிட்டிருந்தார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
தயாரிப்பாளர்
AK 64 திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக திரு. ஐசரி கே கணேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார், என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐசரி கே கணேஷ்-ன் ‘வேல்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம்-தான் அஜித்குமாரின் புதிய படத்தை பிரமாண்டமாக தயாரிக்க முன்வந்துள்ளது.

ஹீரோயின்
அஜித்குமாரின் கடந்த 2 படங்களிலும் நடிகை த்ரிஷா க்ரிஷ்னன் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது AK 64 திரைப்படத்திற்கு கதாநாயகியாக கே.ஜி.எஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்து வருகிறது. இவர் இப்படத்திற்கு முன் ஹிட் 3 படத்தில் நாயகியாக நடித்து பலர் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் இவர் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

குட் பேட் அகிலி திரைப்படம் வசூல் ரீதியாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது அதே நாயகன் – இயக்குனர் கூட்டணியில் உருவாகும் ‘AK 64’ படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் எனவும் 500 கோடிகளை தாண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளது.