தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டே திரைப்படங்கள் உருவாகின . மேலும் நாடக உலகில் இருந்தவர்களே திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்ததால் வசனத்தை விட நன்கு பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக குறிப்பாக கதாநாயகர்களாக திரைப்படங்களில் நடித்து வந்தனர், அப்படி நம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரும் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
ஆண்கள் மட்டுமே அப்பொழுது முன்னணி கதாபத்திரங்களில் நடித்து வந்தனர். பெண்களுக்கான கதாபாத்திரங்கள் மிகவும் குறைவாகவே இருந்தது. இதை எல்லாம் உடைத்தது, தமிழ் சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் முதல் கனவுக் கன்னி என்று வர்ணிக்கப்படும் டி ஆர் ராஜகுமாரி அவர்கள் தான்.
தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட டி ஆர் ராஜகுமாரி நடனத்திலும் சங்கீதத்திலும் முறையாக பயிற்சி பெற்று கை தேர்ந்தவர். 1939-ல் “குமார குலோத்துங்க” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான டி ஆர் ராஜகுமாரி தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்ற அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் , மேலும் சில படங்களை தயாரித்தும் உள்ளார் .
ஆணாதிக்கம் அதிகம் இருந்த சினிமா உலகில் இவர் ஏற்று நடித்த கதாபத்திரங்கள் வெகுவாக அனைவரையும் ஈர்த்தது . வசீகரமான கண்கள் , சிறப்பான நடனம் , அழகான குரல் , அற்புதமான நடிப்பு என ஒரு சேர வைத்திருந்த டி ஆர் ராஜகுமாரி தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே உருவாகினார் . 1940 களில் தியாகராஜ பாகவதர், , பி.யு.சின்னப்பாவிருக்கு இணையாக இவருக்கு ரசிகர்கள் இருந்ததாக கூறப்படுகிறது .
கணவனை காப்பாற்ற போராடும் பெண்ணாக இவர் நடித்த சந்திரலேகா இந்தியா சினிமா பிரம்மாண்டத்திற்கு முதல் அச்சாணி என்றே சொல்லலாம் .அதுமட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் பல சாதனைகளை படைத்தது . முக்கியமாக சந்திரலேகா கதாபாத்திரத்தில் நடித்திருந்த டி ஆர் ராஜகுமாரி மொத்த படத்தையும் தன் தொழில் சுமத்திருப்பர் .நடனம் , பாட்டு நடிப்பையும் தாண்டி சர்க்கஸ் போன்ற சாகச காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும் அதுபோன்ற ஆபத்து நிறைந்த காட்சிகளில் கூட மிக நேர்த்தியாக நடித்திருப்பார் டி ஆர் ராஜகுமாரி.
கதநாயகியாக மட்டும் இல்லாமல் வில்லியாகவும் திரைப்படங்களில் கலக்கி இருப்பார் டி ஆர் ராஜகுமாரி. எந்த வசீகர கண்களால் அனைவரையும் கவர்த்தரோ அதே வசீகர கண்களை வைத்தே வில்லதனத்தில் மிரட்டி இருப்பார் . ஹரிதாஸ் படத்தில் ரம்பையாக சூழ்ச்சி செய்து நாயகனை மயக்கி சொத்தை பிடுங்குவதிலும் சரி , மனோகரா படத்தில் வசந்தசேனையாக தன் அழகை வைத்து வைத்து மன்னனை வசீகரத்து தன் வலையில் விழவைத்து ராணி ஆகுவதிலும் சரி , அட்டகாசமான வில்ல தனத்தை வெளிப்படுத்திருப்பார். இவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்களை மற்றவர்கள் நடிக்கவே தயங்குவார்கள் அப்படி துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார் .
நாயிகி , வில்லி , குணசித்திர கதாபத்திரம் என எந்த கதாபத்திரமாக இருந்தாலும் தமக்கென ஒரு தனி முத்திரை பதித்து அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் டி ஆர் ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு முக்கியதுவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து பெண்கள் கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் பிரதானமாக்க விதை விதைத்த நடிகை டி ஆர் ராஜகுமாரி அவர்களை அவரது நினைவு நாளில் நினைவு கூறுவோம்.