தயவு, கருணை, அருள்,என்னும் மூன்றும் அடங்கி உள்ளது. அதுதான் இறைவனுடைய இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம்
அதாவது சுயம் பிரகாச அகல்வான் வெளியில் உள்ளது, பரஞ்ஜோதி. தீபம் போல் இருப்பது இது மெய்யறிவுத் தீபம். புலனறிவு மனோ அறிவு கடந்த பக்குவர்களுக்கே இது விளங்கும். இந்த பரஞ்சோதியே அழியாது நிலைத்து நிற்கும் நிலையே அருள் உயர் நிலையாகவும், இது தான் பராஜ்யோதி அருட்பெரும் நிலையாகும்
நாம் உணர்ந்து தெளிந்து அனுபவித்தும் வெளிப்பாடாய் திகழ்வது சுயஜோதி மூன்றாக அருட்பெருஞ் ஜோதியாக இருப்பது.
இதனையே ஜோதி ஜோதி ஜோதி பரம் என்கிறோம். இந்த பரஞ்ஜோதியை நினைவாற்கண்டும், மறந்து போவர். ஆனால், இந்த நிலை மறவா நிறுத்திக் கொள்ளத் திருவருள் பெற்று இருப்பவர்கள்தான், இதனை அருட்பெருஞ்ஜோதியாகக் காண்பர். இதனையே அகம் கண்டு கொண்ட அருட்பெருஞ்ஜோதியின் அனுபவ நிலையாகும். இதுவே புறவான்வெளிநிறை அருட்பெருஞ்ஜோதி எனவும், அக உண்மை அருட்ஜோதி உண்மையாகவும் அறியலாகும்.
எவரும் பரிந்துரைக்காமல் நம் உள்ளத்தில் தன்னிச்சையாய் உதிக்கும் கருணையே உலகம் வணங்கும் ஜோதி. அதுவே அனைத்தையும் விட இறை அருள் நிறைந்த அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங் கருணையே அருட்பெருஞ்ஜோதி!
தனிப் பெருங்கருணை என்பது உலகில் உள்ள ஒவ்வொன்றின் பாலும் அதற்குரிய அக்கறையையும் பொறுப்பையும் வலியுறுத்துகிறது; ஏனெனில் இவை இறையிலிருந்து பிரிந்து இல்லையே, இயைந்தல்லவா உள்ளது!

