அரவிந்த்சாமி தென்னிந்திய சினிமா ரசிகர்களால 90களில் இருந்து இப்ப வரை கொண்டாடி வர ஓர் நடிகன் இல்ல இல்ல கலைஞன்.
தனக்கு வர போற காதலன், கணவன் எப்படி இருக்கனும்னு பெண்களுக்கு ஒரு கனவு இருக்கும், அப்படி 90’களில் இருந்த பெண்களின் கனவுக்கு பதிலா இருந்தவர் தான் அரவிந்த்சாமி.
தனி ஒருவன் படத்துல சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்த பத்தி சொல்லும் போது படிக்கும் போதே நல்லா படிப்பான், நிறைய படிக்கனும்னு ஆசைப்படுவான், Business-ல அவன அடிச்சுக்க யாரும் இல்ல அந்தளவு புத்தாசாலினு சில காட்சிகள் வரும். அது அப்படியே நிஜ அரவிந்த்சாமிக்கு பொருந்தும்.
சினிமாக்கு வர முன்னாடி நல்ல வசதியான குடும்பத்துல பிறந்து வளர்ந்து இருந்தாலும் அப்பா தர பாக்கெட் மணி பத்தாம சில விளம்பர படங்கள்ல நடிச்சாரு. அப்படி ஒரு விளம்பர படத்துல அரவிந்த்சாமியின் நடிப்ப பாத்த இயக்குனர் மணிரத்னம் 1991-ல வெளியான தளபதி படத்துல அரவிந்த்சாமிய நடிகரா அறிமுகப்படுத்தினாரு.
அர்ஜுனாக முதல் படத்திலேயே இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டியோட நடிச்ச அரவிந்த்சாமி அப்ப யோசிச்சிருப்பாரானு தெரியல அடுத்து பல வருஷங்கள்ல அவரே தென்னிந்திய சினிமா ரசிகர்களால கொண்டாடப்படுற ஸ்டாரா மாறுவாருனு.
தளபதில சூப்பர்ஸ்டார் தம்பியா திரைல கலக்குன அரவிந்த்சாமி 1992-ல வெளியான ரோஜா படம் மூலமா எனக்கும் இப்படி ஒரு கணவர் வேணும்னு நம்ம ஊரு பெண்கள் எல்லாரும் ஆசைப்படுற அளவுக்கு ரொம்ப எதார்த்தமான நடிப்ப வெளிபடுத்தியிருப்பாரு. ரோஜா வெற்றிக்கு ரொம்ப பலமா இருந்தது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள். இப்ப வரை ரேடியோ, டிவி எதுல ரோஜா பாடல் வந்தாலும் அத மாத்தாம பாப்போம், கேட்போம்.

தளபதி, ரோஜானு இயக்குனர் மணிரத்னம் படங்கள்ல மட்டும் நடிச்சிட்டு இருந்த அரவிந்த்சாமி தாலாட்டு, மறுபடியும், பாசமலர்கள், டூயட் இது மாதிரி மற்ற இயக்குனர் படங்கள்லயும் நடிச்சு குழந்தைகள்லருந்து பெரியவர்கள் வரை எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச நடிகரா மாறினாரு.
வெற்றி நாயகனா வெள்ளி விழாக்கள் கண்ட படங்கள்ல நடிச்சிட்டு இருந்த அரவிந்த்சாமி மீண்டும் ஒரு முறை 1995-ல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்துல பம்பாய் படம் நடிச்சாரு. ரோஜா படம் என்ன தாக்கத்த இந்திய சினிமால ஏற்படுத்துச்சோ அதவிட இருமடங்கான தாக்கத்த பம்பாய் ஏற்படுத்துச்சு. ஒரு பக்கம் இசைப் புயலோட இசை, இன்னொரு பக்கம் மணிரத்னத்தின் பிரம்மாண்ட இயக்கம், இது இரண்டுக்கும் இணையா காதலனா,கணவனா, குடும்பத்தலைவான அந்த கதாபாத்திரத்துல வாழ்ந்துருப்பாரு அரவிந்த்சாமி.

பம்பாய்க்கு அப்பறம் இந்திரா, மின்சாரக் கனவு , அலைபாயுதே போன்ற பல வெற்றிப் படங்கள், சில தோல்விகள் இதெல்லாம் பார்த்த அரவிந்த்சாமி ஒரு கட்டத்துல சினிமா வேண்டாம்னு ஒதுங்கியிருந்தாரு. நம்ம பலருக்கு வாழ்க்கைல ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் அதை சிலர் சவாலா நெனச்சு கடந்து போவாங்க, பலர் நம்பிக்கை இழந்து அந்த சூழ்நிலையிலேயே மீதி இருக்க வாழ்க்கைய வாழ்வாங்க. அப்படி தான் ஒரு விபத்து அரவிந்த்சாமி வாழ்க்கைல நடந்துச்சு. நாலு வருஷமா சரியா நடக்க முடியாம, தலை முடி உதிர்ந்து, கனவு கண்ணனா நாம பார்த்த அரவிந்த்சாமியா இதுனு அவரோட தோற்றம் மாறியிருந்துச்சு.
ஆனா ஆரம்ப காலத்துல இருந்தே என்னோட அழகு முகத்துல இல்ல என்னோட திறமைலயும் தைரியத்துலயும் தான் இருக்குனு நம்பினாரு அரவிந்த்சாமி. வாழ்க்கைல எப்பவும் இரண்டாம் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கும் அதை சரியா எப்படி பயன்படுத்தனும்னு நமக்கு சொல்லி கொடுக்க மறுபடியும் தன்னோட குருநாதர் மணிரத்னம் இயக்கத்துல கடல் படம் மூலமா தமிழ் சினிமால ரீ என்ட்ரி கொடுத்தாரு அரவிந்த்சாமி.

அந்த என்ட்ரிக்கு அடுத்து வெளியான தனி ஒருவன் படம் சினிமால இடைவெளி எடுத்து ஒதுங்கியிருந்த பல நடிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்குற விதமா இருந்துச்சு. இப்பவும் “சித்தார்த் அபிமன்யு ” இந்த பெயர் கேட்டா அரவிந்த்சாமியோட ஹீரோயிசம், வில்லனிசம் கலந்த அந்த கதாபாத்திரம் கண்ணு முன்னாடி வந்துட்டு போகும். அப்படியோரு தரமான ரீ என்ட்ரிக்கு அப்பறம் போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம், தலைவி போன்ற பல படங்கள்ல நடிச்சு அடுத்த ரவுண்ட தமிழ் சினிமால சரியா ஆரம்பிச்சுட்டாரு. நவரசா என்ற Anthology-ல ஒரு குறும்படம் கூட இயக்கினாரு.
அரவிந்த்சாமி நடிகர், இயக்குனர் மட்டுமில்ல. ஒரு நல்ல Dubbing Artist கூட, புதிய முகம், The Lion King, உயிரே, சைரா நரசிம்மா ரெட்டி போன்ற படங்கள்ல நடிகர்களுக்கு குரல் கொடுத்து இருக்காரு.
பன்முகத் திறமை கொண்ட அரவிந்த்சாமி இன்னும் பல படங்கள் நடிச்சு, பல படங்கள் இயக்கி இந்திய திரையுலக பெருமைப்படுத்த சூரியன் FM சார்பில் வாழ்த்துக்கள்.
Add Comment