Cinema News Stories

இரண்டாவது படத்திலையே 100 கோடி வசூல் படைத்த தமிழ் பட இயக்குனர்கள் லிஸ்ட்

Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film
Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film

இரண்டாவது படத்திலையே 100 கோடி வசூல் படைத்த தமிழ் பட இயக்குனர்கள் லிஸ்ட் – தமிழ் சினிமாவில் தான் இயக்கிய இரண்டாம் படத்திலையே 100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்த தமிழ் பட இயக்குனர்களின் பட்டியல் இங்கு உள்ளன. இதில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ், நெல்சன் திலீப்குமார் என பல நட்சத்திரங்கள் உள்ளனர். முழு தகவல்கள் இதோ.


அட்லீ

இயக்குனர் அட்லீ 2013-ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படத்தினை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் தெறி திரைப்படத்தினை இயக்கியுள்ளார். தெறி படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மஹேந்திரன் என பல நட்சத்திர கலைஞர்கள் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படம் 2016-ல் வெளியானது. தெறி படம் வெளியாகி 100 கோடிகளுக்கு மேல் வசூல் படைத்து அந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்து பல ரசிகர்களின் மனதை வென்றது. தான் இயக்கிய இரண்டாவது படத்திலையே 100 கோடிகள் வசூல் படைத்து இயக்குனர் அட்லீ அந்த ஆண்டின் பல விருதுகளை வென்றார்.

Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film
Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film

லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் 2017-ஆம் ஆண்டு மாநகரம் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்படத்தினை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் கைதி படத்தினை இயக்கியுள்ளார். கைதி படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான இப்படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை படைத்து பிரபலமானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய இரண்டாவது படத்திலையே 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பலர் பாராட்டுகளை வென்றார்.

Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film
Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தினை இயக்கி வருகிறார். இவர் 2018-ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தினை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்தினை வெற்றியை தொடர்ந்து இவர் 2021-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி முக்கிய இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் இயக்கிய டாக்டர் படம் உலகளவில் 100 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை படைத்து தமிழ் சினிமாவில் வெற்றி வாகை சூடியுள்ளது. நெல்சன் திலீப்குமார் தான் இயக்கிய இரண்டாவது படத்திலையே 100 கோடிகள் வசூலித்து தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார்.

Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film
Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film

தனுஷ்

தனுஷ் – தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக துறையில் பணியாற்றி வரும் பிரபலம். இவர் நடிகராக பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தாலும் அவ்வப்போது இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். தனுஷ் இயக்கிய பா.பாண்டி திரைப்படத்திற்கு பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படத்தினை தொடர்ந்து 2024ல் ராயன் படத்தினை இயக்கி தனது இரண்டாவது படத்தின் மூலம் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film
Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film

தனுஷ் ‘ராயன்’ திரைப்படத்தில் நடிகர் / இயக்குனர் என இரு துறைகளிலும் பணியாற்றி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் இப்பம் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் – தமிழ் சினிமாவில் பிரபலமாகி உள்ள இளம் நடிகர் ஆவார். இவர் இயக்குனராக 2019-ஆம் ஆண்டு கோமாளி திரைப்படத்தினை இயக்கி அறிமுகமானவர். இவர் இயக்கிய கோமாளி திரைப்படம் 2019-ல் 50 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை படைத்து வெற்றி படமாக அமைந்தது. இவர் அடுத்ததாக 2022-ல் லவ் டுடே திரைப்படத்தில் நாயகன் / இயக்குனர் என இரு துறைகளிலும் பணியாற்றி பலரின் ஆதரவை பெற்றார். லவ் டுடே திரைப்படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து மிக பெரிய வெற்றியை கண்டுள்ளது.

Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film
Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film

பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கம் இரண்டாவது திரைப்படம் மற்றும் ஹீரோவாக தனது முதல் படத்துலையே 100 கோடி வசூல் திரைப்படத்தில் பணியாற்றி பலர் மத்தியில் கொண்டாடப்பட்டார். இவரின் வளர்ச்சி தற்போது பெரிய அளவில் தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அஸ்வத் மாரிமுத்து

அஸ்வத் மாரிமுத்து – தமிழ் சினிமாவில் தற்போது இளம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர். இவர் 2020-ல் ஓ மை கடவுளே திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து தெலுங்கு திரையுலகில் ‘ஓ மை கடவுளே’ ரீமேக் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film
Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film

தமிழ் சினிமாவில் ‘ஓ மை கடவுளே’ என்ற வெற்றி படத்திற்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் தான், டிராகன். டிராகன் திரைப்படம் 2025-ல் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. இப்படம் உலகளவில் 100 கோடிகள் வசூலித்து இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் இயக்கிய இரண்டாவது படத்திலையே 100 கோடி வசூல் ஈட்டி தற்போது தமிழ் சினமா முக்கிய இயக்குனர் பட்டியலில் இணைந்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி

ராஜ்குமார் பெரியசாமி – 2017 ஆம் ஆண்டு ரங்கூன் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமான ரங்கூன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படவில்லை. இருப்பினும் இவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு 2024-ல் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக நடிக்க அமரன் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் ஹிட் பட இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் உலகளவில் 350 கோடிகளுக்கு மேல் வசூலித்து பிரமாண்ட சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இப்படம் மிகப்பெரிய மைலேஜ் படமாக அமைந்து 2024-ல் சிறந்த படமாக இப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.

Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film
Atlee to Lokesh: Tamil Directors List who gave 100 crs in their Second Film

Article By SakthiHarinath

About the author

Sakthi Harinath