Specials Stories

AVM Saravanan – கையைக்கட்டிக் கொண்டு தென்னிந்திய சினிமாவை கட்டியாண்ட அரசன்

AVM Saravanan - Once upon a time Lived as a King of Tamil Cinema
AVM Saravanan - Once upon a time Lived as a King of Tamil Cinema

இன்னைக்கு தமிழ் சினிமால எத்தனையோ தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கு! ஆனா ஒரு சில நிறுவனங்கள் தான் சினிமால நிலைச்சு நிற்கும், மக்கள் மனசுல இந்த தயாரிப்பு நிறுவனத்துலருந்து படம் வந்தா தரமான படைப்பாயிருக்கும்னு நம்பிக்கையா இடம் பிடிச்சிருக்கும். அப்படி 1930ல ஆரம்பிச்சு தமிழ் சினிமாக்கு பல நடிகர்களையும் , நடிகைகளையும் , இயக்குனர்களையும், இசையமைப்பாளர்களையும்,கேமராமேன்களையும் அறிமுகப்படுத்தின பிரபலமான தயாரிப்பு நிறுவனம் தான் AVM Productions.

இன்னைக்கும் புதுசா சென்னைக்கு போற சினிமா ரசிகர்கள் பலரும் வடபழனில இருக்க AVM உருண்டைய பாக்காம போகமாட்டாங்க. சினிமா படப்பிடிப்பு, சீரியல் படப்பிடிப்பு மற்றும் 80s,90aகிட்ஸ் ரசிச்சு பார்த்த பல ரீயாலிட்டி ஷோ ஷுட்டிங் எல்லாம் AVM ஸ்டுடியோல தான் நடக்கும். இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனம் அதோட நிறுவனர் திரு.A.V.மெய்யப்பச் செட்டியார் அவர்கள்கிட்டயிருந்து அவருடைய மகன் திரு.A.V.M.சரவணன் பொறுப்புக்கு வருது. A.V.M.சரவணன் சின்ன வயசுல சினிமா பார்க்க அவ்வளவு விரும்பம் காட்டமாட்டாருனு அவரே ஒரு பேட்டில சொல்லியிருக்காரு,ஆனா காலத்தின் கட்டாயத்த யாரலையும் மாத்த முடியாதே!

திரு.A.V.M.சரவணன் அவர் சகோதரர்களோட சேர்ந்து பொறுப்புக்கு வந்த அப்பறம் AVM தயாரிப்புல வெளியான படம் 1959ல வந்த “மாமியார் மெச்சின மருமகள்”. அடுத்து இந்தி,பெங்காலினு சில படங்கள் AVM தயாரிப்புல வருது. இன்னைக்கு நாம உலகநாயகனா கொண்டாடுற கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமா அறிமுமான “களத்தூர் கண்ணம்மா” 1960ல AVM தயாரிப்புல வெளியாகி மிகப்பெரிய வெற்றியாமாறுது.

அந்த வெற்றி திரு.A.V.M.சரவணனை இன்னும் வேகமா தமிழ் ,தெலுங்கு , ஹிந்தி,மலைமாளம்னு தென்னிந்திய மொழிகள்ல நிறைய தரமான படங்களை தயாரிக்க வெச்சது. அப்படி வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படங்கள் தான் “பாவ மன்னிப்பு,பார்த்தால் பசி தீரும்,நானும் ஒரு பெண்,சர்வர் சுந்தரம்,காக்கும் கரங்கள்,அன்பே வா,அதே கண்கள், உயர்ந்த மனிதன் ,காசே தான் கடவுளடானு” சொல்லிக்கிட்டே போகலாம்.

இப்படி இந்திய சினிமான்ற இமயமலைல தலை சிறந்த தயாரிப்பு நிறுவனமா வெற்றிக் கொடிய நட்டு அடுத்தடுத்து ஹிட்டு கொடுத்த AVM நிறுவனம் சில படங்களேட தோல்விகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால 1970க்கு பிறகு பெருசா தயாரிப்புத் ஈடுபடல.இருந்தாலும் திரு.A.V.மெய்யப்பச் செட்டியார் கடைசியா இயக்குனர் S.P.முத்துராமன் இயக்கத்துல் சூப்பர் ஸ்டார் ரஜினிய வச்சு ஒரு படம் எடுக்க முடிவு பண்ணிணாரு.ஆனா அந்த படம் ஆரம்பிக்குற முன்னாடியே திரு.A.V.மெய்யப்பச் செட்டியார் காலமாகிட்டாரு. ஆனாலும் அப்போவோட ஆசைய நிறைவேற்ற திரு.A.V.M.சரவணன் அதே கூட்டணியோட எடுத்து மிகப்பெரிய ஹிட்டான படம் தான் 1980ல வெளியான “முரட்டு காளை”. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் A.V.M. Productionsக்கு பண்ணின முதல் படமும் இது தான்.

AVM Saravanan - Once upon a time Lived as a King of Tamil Cinema
AVM Saravanan – Once upon a time Lived as a King of Tamil Cinema

இந்த வெற்றி திரு. A.V.M. சரவணன் அவர்களை மறுபடியும் மிகப்பெரிய உத்வேகத்தோட பல படங்களை தயாரிக்க வெச்சது. அந்த பொற்காலத்துல வெளியான படங்கள் தான்

“போக்கிரி ராஜா, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, தூங்காதே தம்பி தூங்காதே,புதுமைப்பெண், நல்லவனுக்கு நல்லவன், உயர்ந்த உள்ளம்,Mr.பாரத் , சம்சாரம் அது மின்சாரம், மெல்லத் திறந்தது கதவு,பாட்டி சொல்லைத் தட்டாதே,மாநகர காவல்,எஜமான் ,சேதுபதி IPS” இதெல்லாம்.

இப்படி திரு.A.V.M .சரவணன் ரஜினி,கமல், விஜயகாந்த்,மைக் மோகன், பாக்கியராஜ், அர்ஜுன்,சத்தியராஜ் ,பாண்டியராஜன் எல்லாரையும் தன்னோட தயாரிப்புல நடிக்க வச்சு மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்துட்டேயிருந்தாரு.எல்லா நடிகர், நடிகைகள், இயக்குனர்களோட இனிமையா பழகினாரு. இந்த வெற்றிகள் எல்லாம் அடுத்த தலைமுறை ஹீரோக்களான விஜய், அஜித்,விக்ரம்,சூர்யா போன்ற நடிகர்களுக்கும் A.V.M தயாரிப்புல நடிக்க வாய்ப்புகளை தந்துச்சு.

AVM Saravanan - Once upon a time Lived as a King of Tamil Cinema
AVM Saravanan – Once upon a time Lived as a King of Tamil Cinema

A.V.M தயாரிப்புல வெளியான படங்கள் குறைவான பட்ஜெட்ல அதிக லாபம் தந்துச்சு.ஆனா ஒரு மிகப்பெரிய படமா A.V.Mக்கு அமைஞ்சது 2007ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புல வெளியான SIVAJI THE BOSS. திரு. A.V.M சரவணன் தன்னோட அப்பா A.V.மெய்யப்பச் செட்டியாரோட நூற்றாண்ட கொண்டாடுற படமா சிவாஜிய தயாரிச்சாரு. இன்னைக்கும் சிவாஜி படத்தோட பிரம்மாண்டமான காட்சிகளும் ,அதோட மேக்கிங்கும்,AVM productionsல வெளியான படமானு ஆச்சரியப்பட வச்சது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் களையும். திரு.A.VM.சரவணன் 60 கோடில தயாரிச்ச சிவாஜி THE BOSS பல கோடி ரூபாய் லாபத்தை A.V.Mக்கு கொடுத்தது. அந்த வெற்றி 2009ல சூர்யா நடிப்புல வெளியான “அயன்”,விஜய் நடிப்புல வெளியான “வேட்டைக்காரன்” போன்ற படங்களை தயாரிக்க வெச்சது. ஆனா 2014க்கு அப்பறம் திரு.A.V.M.சரவணன் சில தனிப்பட்ட காரணங்கள் மற்றும் சினிமால வியாபாரம் வேற பரிமணாத்த அடைஞ்சதால தமிழ் சினிமால திரைப்படங்கள் தயாரிக்குறதை முற்றிலும் நிறுத்திட்டாரு.

லக்கி பாஸ்கர் படத்துல வர வசனத்துக்கு ஏற்ற மாறி! எப்போ ஆட்டத்த நிறுத்தனும்னு சரியான தெளிவோட இந்த முடிவ எடுத்தாரு திரு.A.V.M.சரவணன்.ஏன்னா 2010க்கு அப்பறம் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களே நடிக்கர்களோட சம்பளம் ,சினிமாவோட production cost இதெல்லாம் சமாளிக்க முடியாம பின் வாங்கிட்டாங்க. தன்னோட பதினேட்டு வயசுல தயாரிப்பாளரா சினிமா பயணத்தை தொடங்கி எத்தனையோ உச்சத்தை பார்த்த திரு.A.V.M.சரவணன் சத்தமா பேசியோ,யாரையும் மரியாதை குறைவா நடித்தியோ இதுவரை யாரும் பார்த்ததில்ல , அப்படி சொன்னதுமில்ல. அப்பாகிட்ட பேசும் போது திரு.A.V.M.சரவணன் எப்படி கையைக்கட்டி மரியாதையோட இருந்தாரோ ! அதே போல தான் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்கள் ,தன்னவிட வயது குறைவானவங்க, எளிமையாவனாங்கனு எல்லாருக்கும் சமமான மரியாதைய கையைக்கட்டி கொடுத்தாரு.

திரு.A.V.M சரவணன் அவர்களுக்கு சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான தயாரிப்பாளரா 1963 ல வெளியான நானும் ஒரு பெண்,1986ல வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்துக்கும் இரண்டு Filmfare விருது கிடைச்சது. தமிழ்நாடு அரசோட உயரிய விருதான கலைமாமணி விருதும் திரு.A.V.M.சரவணன் அவர்களோட திரைப்பயணத்த கவுரவிக்கும் விதமா கிடைச்சது.

தயாரிப்பாளரா, விநியோகிஸ்தாரா பல அவதாரங்கள் கொண்ட திரு.A.V.M சரவணன்!

*முயற்சி திருவினையாக்கும்

*மனதில் நிற்கும் மனிதர்கள்

*AVM 60 சினிமானு பல புத்தகங்களும்! “நானும் சினிமாவும்” என்ற தலைப்புல பிரபல செய்தித்தாள்ல ஒரு தொடர் எழுதினாரு.

AVM Saravanan - Once upon a time Lived as a King of Tamil Cinema
AVM Saravanan – Once upon a time Lived as a King of Tamil Cinema

இன்னைக்கு சினிமால ஒரு படம் ஹிட் கொடுத்த நடிகர் ,நடிகை, இயக்குனர் எல்லாரும் அடுத்த படம் பண்ணும் போது! நான் இல்லனா தமிழ் சினிமாவே இல்லன்ற மாதிரி பல பேட்டிகள் கொடுக்குறாங்க , ஷுட்டிங்ல சேட்டைகள் செய்யுறாங்க. ஆனா இந்திய சினிமாவையே தன்னோட தயாரிப்பு நிறுவனத்தால திரும்பி பார்க்க வச்ச திரு.A.V.M சரவணன் ஒரு வெள்ள சட்டை ,வெள்ள பேண்ட் , சாதாரண செருப்பு அணிஞ்சு கையைக்கட்டி பணிவோட தான் கடைசி வரை இருந்தாரு.

இன்னைக்கு மாரியாதைக்கும், எளிமையான பண்புக்கும் உதாரணமா தமிழ் சினிமால வாழ்ந்த திரு. A.V.M சரவணன் அவர்கள் நம்மோட இல்லைனாலும் அவரு தயாரிப்புல வெளியான படைப்புகள் பல தலைமுறைகள் தாண்டியும் இவரின் பெயர பேசும்…பேசும்… பேசிக்கிட்டேயிருக்கும்.

ARTICLE BY -RJ SRINI

About the author

Sakthi Harinath